Monday, May 21, 2018

புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றும் தொலைக்காட்சிகள்! இலக்கு வைக்கப்படும் இலங்கை சிறுமிகள் !


தென்னிந்திய தொலைக்காட்சிகளின் நடத்தப்பட்டு வரும் ரியாடிலிட்டி ஷோ நிகழ்ச்களின் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
பல தொலைக்காட்சி நிலையங்கள் போட்டி போட்டு பல்வேறு ரியாலிட்டி ஷோ நிகழ்சிகளை நடத்தி வருகின்றன.
சிறுவர்கள், இளைஞர்களுக்காக நடத்தப்படும் பாட்டு இசை நிகழ்ச்சிகள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றுள்ளன.
பல சுற்று சீசன்களாக நடத்தப்பட்டு வரும் இவ்வாறான போட்டிகளில் இந்திய மாநிலங்களுக்கு அப்பால், வெளிநாட்டிலுள்ள போட்டியாளர்களும் பங்கேற்கின்றனர்.
அதிலும் குறிப்பாக இலங்கையை சேர்ந்த பல சிறுமிகள் பங்கேற்றுள்ளனர்.
தற்போது விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர், ஷீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகம பா என்றும் பாட்டு போட்டியில் இலங்கையை சேர்ந்த பலர் பங்கேற்றுள்ளனர்.
சமகாலத்தில் ஷீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகம பா போட்டியில் இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் பங்கேற்றுள்ளார்.
இலங்கை சேர்ந்த மாதுவி எனும் யுவதி பங்கேற்று பலரையும் கவர்ந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், தமிழகத்தில் நடத்தப்படும் போட்டியொன்றுக்கு ஏன் வெளிநாடுகளிலுள்ள தமிழ் சிறுமிகள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர் என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பெருமளவு தமிழர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் குடியேறியுள்ளனர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை இலக்கு வைத்து தமது வர்த்தக நோக்கத்தை நிறைவேற்றவே இலங்கை போட்டியாளர்களை இணைத்துக் கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதன்மூலம் தொலைக்காட்சிகளின் ரிஆர்பி மேலும் உயரும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
இதுவரை நடத்தப்பட்ட பல போட்டிகளில் இலங்கையை சேர்ந்த சரிக்கா, ஜசிக்கா, டிசாதனா என்ற பட்டியலில் தற்போது மாதுவி என்ற இலங்கை சிறுமியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.


http://www.jvpnews.com/statements/04/173304?ref=ls_d_jvp

No comments:

Post a Comment