Tuesday, April 3, 2018

கருப்பின மனிதனை ஈவிரக்கமின்றி தாக்கும் அமெரிக்க பொலிசார்: அதிர்ச்சி வீடியோ


என்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று கதறும் ஒரு கருப்பின மனிதனை முரட்டுத்தனமாக பொலிசார் சாலையில் போட்டு தாக்கும் வீடியோ ஒன்று அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனை நெல்சன் மண்டேலாக்கள் வந்தாலும், எத்தனை மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் இன வெறியை மட்டும் ஒழிக்க முடியாது.
சென்ற வாரம் ஒரு கருப்பின மனிதனை பொலிசார் சுட்டுக் கொன்றனர். வட கரோலினாவில் பொலிசார் ஒருவர் கருப்பின மனிதனை அடித்து உதைத்து கழுத்தை இறுக்கி மூச்சுத்திணற வைக்கும் வீடியோ ஒன்றும் சமீபத்தில் வெளியானது.

இன்னொரு மனிதனை சந்தேகத்தின் பேரில் பொலிசார் சுட்டதாகக் கூற அவர் இறந்து போனார். சந்தேகம் என்றால் அவனைக் கையிலோ காலிலோ சுட வேண்டியதுதானே என்று அவரது பாட்டி கதறி அழுத வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வெளியானது.
என்னதான் நடக்கிறது அமெரிக்காவில். தனக்கு உடல் நலக்குறைவு இருக்கிறது என்று கூறியும் தான் கவனிக்காமல் விடப்பட்டதாகக் கூறிய கருப்பின விளையாட்டு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நான் செரீனாவாக இல்லாதிருந்தால் இறந்திருப்பேன்” என்று கூறிய பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் Forrest Curry என்னும் (35)கருப்பின மனிதரை பொலிசார் தாக்கும் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோ வெளியாகி கண்டனங்கள் வெளியானதும் சுதாரித்துக் கொண்ட பொலிசார், அவனுக்கு கை விலங்கு மாட்ட முடியவில்லை, அதனால் தான் அவ்வாறு நடந்துகொண்டோம் என்று சப்பைக் கட்டுக் கட்டியுள்ளார்கள்.
பொருளாதார நிலையிலும் புகழின் உச்சியிலும் இருக்கும் செரீனா வில்லியம்ஸாக இருந்தாலும் சரி சாலையில் சுட்டுக்கொல்லப்படும் முகவரி இல்லாத மனிதனாக இருந்தாலும் சரி, அவர்களை அமெரிக்கர்கள் நடத்தும் விதத்தைப் பார்த்தால், நாம் நாகரீக உலகம் என்று அழைக்கப்படும் இந்த உலகத்தில்தான் வாழ்கிறோமா என்னும் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

http://news.lankasri.com/usa/03/175553?ref=ls_d_world

No comments:

Post a Comment