கனடாவில் தஞ்சம் அடைந்திருக்கும் அகதிகளை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதால் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து ஆராய்வதில் கனடிய குரவரவு துறை அதிகாரிகளின் அணுகுமுறைகள் மேலோட்டமானதாக இருக்கிறது என கூட்டாட்சி நீதிபதி விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாகராசா என்பவர், இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக, 2013 ஆம் ஆண்டு கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தனது நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இரண்டு முறை இலங்கை அதிகாரிகளால் சித்ரவதைக்கு உள்ளாகினேன், தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என கருதுவதால், இனி தன்னால் இலங்கைக்கு திரும்பி செல்ல இயலாது என தனது நிலைப்பாடு எடுத்துக்கூறி, கனடிய குரவரவு துறையிடம் தஞ்சம் கோரியுள்ளார்.
ஆனால், இவர் சமர்ப்பித்த ஆதாரங்கள் அனைத்தும் போதுமானதாக இல்லை எனக்கூறி, குடிவரவு துறை அதனை நிராகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தனது நிலைப்பாடு குறித்து இவர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அகமத், நாகராசாவின் விடயத்தில் குடிவரவு துறை அதிகாரிகள் நடந்துகொண்டது முறையற்றது. 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு, இந்தியா மற்றும் அமெரிக்கா வழியாக கனடாவிற்கு வந்துள்ளார். அதே ஆண்டில், இவர் தஞ்சம் கோரியபோது, இலங்கையில் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாமல் போனதால் குடிவரவுத்துறை அதிகாரிகளால் அகதிக்கோரிக்கை நிராகரிகப்பட்டது.
இந்நிலையில் ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது அதிகாரிகளின் அணுகுமுறை தவறானது என கூறியுள்ள நீதிபதி, தெளிவான காரணங்கள் ஏதுமின்றி நாகராசாவின் கோரிக்கை நிராரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாகராசா கூறுகையில், யாழ்ப்பாண கல்லூரியில் Journalism படித்துக் கொண்டிருக்கும் போதே கனடாவுக்கு வந்து விட்டேன்.
கனடாவில் தடுப்பு முகாமில் என்னை அடைத்து வைத்திருந்த போது, மன அழுத்தத்திற்கு ஆளானேன், ஆகஸ்ட் மாதம் என்னை நாட்டை விட்டு போகச் சொன்னார்கள்.
அதனால் இருமுறை தற்கொலைக்கு கூட முயன்றிருக்கிறேன், எனது நாட்டுக்கு திரும்பி செல்வதற்கு மிகவும் பயமாக இருக்கிறது என உருக்கத்துடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகராசாவின் வழக்கறிஞர் Ian Sonshine கூறுகையில், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி பெரும்பாலான அகதி விண்ணப்பங்களை குடிவரவுத்துறை அதிகாரிகள் நிராகரித்து விடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
http://news.lankasri.com/canada/03/175426?ref=ls_d_special
No comments:
Post a Comment