ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் Horst Seehofer, இஸ்லாம் ஜேர்மனியின் ஒரு பகுதி கிடையாது என கூறியது அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer ‘இஸ்லாம் ஜேர்மனி நாட்டின் ஒரு பகுதி கிடையாது’ என ஒரு பேட்டியில் கூறியதாக செய்தி வெளியானது.
இந்த விடயம், ஜேர்மனி அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ஜேர்மனியின் பிரபல பத்திரிக்கை ஒன்று, ஐரோப்பியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கடந்த சில தசாப்தங்களாக குடியேறிய இஸ்லாம் மக்களுக்கு பெரும் பங்குள்ளது.
மேலும், ஜேர்மனி நாட்டின் வளர்ச்சிக்கும் இஸ்லாமியரின் பங்கு உள்ளது என தெரிவித்திருந்தது. ஆனால், Horst Seehofer இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அத்துடன் அவர் இது குறித்து கூறுகையில், ஜேர்மனியை வடிவமைத்தது ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, தேவாலய விடுமுறைகள், ஈஸ்டர் போன்ற சடங்குகள் மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியவை இணைந்த கிறித்துவம் தான்.
எனவே, இஸ்லாம் ஜேர்மனியின் ஒரு பகுதி கிடையாது. நம் மத்தியில் வாழும் முஸ்லீம்கள், இயற்கையாக ஜேர்மனியின் பகுதியாக உள்ளனர்.
ஆனால், நமது மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை நாம் நிச்சயமாக தியாகம் செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜேர்மனியின் Chancellor ஏஞ்சலா மெர்கல் ஜூடியோ-கிறித்துவத்தின் வேர்கள் ஜேர்மனியில் ஆழமாக இருந்த போதிலும், 4 மில்லியன் இஸ்லாமியர்கள் அவர்களுக்கான வீடுகளை தற்போது உருவாக்கியுள்ளதாக அமைச்சரின் கருத்து எதிராக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கூறுகையில், ‘இந்த இஸ்லாமியர்கள் தான் ஜேர்மனியின் ஒரு பகுதியாக உள்ளனர். அவர்களின் மதமும், இஸ்லாமும் ஜேர்மனியின் ஒரு பகுதி தான்’ என தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/germany/03/175392?ref=ls_d_germany

No comments:
Post a Comment