கருவிலிருக்கும் குழந்தையின் செயல்களை தாய்மார்கள் கொண்டாடுவது வழக்கமான விஷயம் என்றால், விசித்திரமான அழகுடன் கூடியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. குழந்தை வெளி உலகத்தை காணும் முன்பு பல வித அழகிய சேட்டையை கருவில் செய்துவிட்டு தான் பூமியில் பிறக்கிறது. 100ல் 90 சதவிகித தாய்மார்கள் மனதில் இருக்கும் கேள்விகளுள் ஒன்று இந்நேரம் என் குழந்தை என்ன தான் செய்துக்கொண்டிருப்பான் என்பதே ஆகும். அதைப்பற்றிய அழகிய குறிப்பு தான் இப்பதிவு.
இரவில் குழந்தை என்ன செய்யும்?
கர்ப்ப காலத்தின் 7 ஆவது மாதத்தில் உங்கள் கருவிலிருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் பகலிலே தூங்கும். மனோதத்துவத்தின்படி குழந்தைகள் 95 சதவிகிதம் அரைத்தூக்கத்திலே இருப்பார்களாம். அப்போது உங்கள் குழந்தைகள் மணிக்கு 50 முறை அசைந்தபடி இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால் பிரசவ தேதி நெருங்க, குழந்தைகளின் செயல்களை உங்களால் உணரவும் முடிகிறது.சில குழந்தைகள் பகலில் மிகவும் துடிப்புடன் இருக்குமென அமெரிக்க பல்கலைக்கழகம் சொல்கிறது. குழந்தைகளுக்கு எடுக்கும் விக்கல் மூலம் அவர்களுடைய சின்ன அசைவுகளை உங்களால் தெரிந்துக்கொள்ள முடிகிறது. ஒருசில சமயத்தில் உங்கள் குழந்தை வேகமாக எட்டி உதைப்பதன் மூலமாகவும் அவர்களின் அசைவை மிக தெளிவாக நீங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது.
எதனால் குழந்தை இரவில் விழித்திருப்பான்?
இதற்கு முக்கிய காரணம் வேறு யாருமல்ல. நீங்கள் தான்... ஆம், பகல் முழுவதும் ஏதாவது செயலை செய்யும் நீங்கள் கருவிலிருக்கும் குழந்தையை அசைவின் மூலமாக தாலாட்டி தூங்க வைக்கவும் செய்கிறீர்கள். அதே இரவில் நீங்கள் அமைதியாக தூங்க முயற்சி செய்ய, பகலில் தூக்கத்தை கெடுத்ததற்கு குழந்தைகள் உங்களை பழிவாங்க அங்கும் இங்கும் அசைந்தபடியும், உதைத்தபடியும் இருக்கிறார்கள்.ஏழாவது மாதத்தில் என்ன நடக்கும்?
கருவிலிருக்கும் குழந்தைகள் ஏழாவது மாதத்தில் கொடுக்கப்படும் சத்தத்திற்கு பதில் தர தொடங்குகின்றனர். உங்கள் குழந்தைகளை சுற்றி ஏதேனும் புதிய சத்தம் கேட்டால், உடனே உங்கள் குழந்தை துடிப்புடன் எட்டி உதைப்பான்.என்ன செய்ய வேண்டும்?
உங்கள் கருவிலிருக்கும் குழந்தை இரவுப்பொழுதில் எட்டி உதைத்தால், நீங்கள் அப்போது எழுந்து நேராக அமர்ந்தபடி உட்காருங்கள். அவ்வளவு தான், நீங்கள் எழுந்துவிட்டதை தெரிந்துக்கொண்ட உங்கள் மகன் செவ்வென அமைதியாவான். கருவிலிருக்கும் குழந்தையை பகல் பொழுதிலும் அசைய செய்யுங்கள். இதனால், அவர்கள் பகலிலும் ஒரு சில மணி நேரங்கள் தூங்கி உங்களுக்கு வேலை செய்ய ஒத்துழைப்பு தருவதோடு இரவிலும் அமைதியாக இருப்பார்கள்.இதனால் தான் பகல் பொழுதில் வயிற்றை தாய்மார்கள் தடவி கொடுக்கிறார்கள். உங்கள் குழந்தை உதைக்காமல் இருப்பதால் உடல்நல குறைபாடு என மட்டுமே அர்த்தமல்ல. அவர்கள் தூங்கவும் செய்யலாம் அல்லவா! ஒருவேளை அவர்கள் அசைவு நீண்ட நேரத்துக்கு இல்லாத பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
http://www.manithan.com/pregnancy/04/168365?ref=ls_d_manithan
No comments:
Post a Comment