Thursday, April 5, 2018

இரண்டாகப் பிரிகிறது ஆபிரிக்கக் கண்டம்! திடுக்கிடும் தகவல்...


கென்­யா­வில் ஏற்­பட்­டுள்ள மிகப்­பெ­ரிய நிலப்­பி­ளவு கார­ண­மாக, ஆபி­ரிக்­கக் கண்­டம் இரண்­டா­கப் பிள­வு­பட வாய்ப்­புள்­ளது என்று புவி­யி­யல் வல்­லு­நர்­கள் தெரி­வித்­த­னர்.
சமீ­பத்­தில் ஆப்­பி­ரிக்கக் கண்­டத்­தில், மிகப்­பெ­ரிய நிலப்­பி­ளவு ஏற்­பட்­டது. இந்தப் பிள­வின் கார­ண­மாக கென்­யா­வில் உள்ள நைரோபி – நரோக் நெடுஞ்­சாலை முழு­வ­தும் சேத­ம­டைந்­த­தோடு, அந்­தப் பகு­தி­யில் நில அதிர்­வு­க­ளும் ஏற்­பட்­டன.
வடக்கே ஏடன் வளை­கூடா தொடங்கி தெற்கே சிம்­பாப்வே வரை சுமார் 3 ஆயி­ரம் கிலோ­மீற்­றர் நீளத்­துக்கு இந்­தப் பிளவு ஏற்­பட்­டுள்­ளது.
பிளவு அதி­க­ரித்­துச் செல்­லும் என்­ப­தால் ஆபி­ரிக்­கக் கண்­டம் இரண்­டா­கப் பிரி­வு­பட வாய்ப்­புள்­ளது என்று தெரி­விக்­கின்­ற­னர் வல்­லு­நர்­கள்.
இந்­தப் பிள­வின் கார­ண­மாக எத்­தி­யோப்­பியா, ருவாண்டா, தன்­சா­னியா, சாம்­பியா உள்­ளிட்ட பத்­துக்­கும் மேற்­பட்ட நாடு­கள் தனிக் கண்­ட­மாக பிரிய வாய்ப்பு இருப்­ப­தாக கூறிய விஞ்­ஞானி­கள், இத்­த­கைய மாற்­றங்­கள் ஏற்­பட இன்­னும் பல ஆயிரம் ஆகும் என­வும் தெரி­வித்­த­னர்.

http://www.canadamirror.com/world/04/167774

No comments:

Post a Comment