Wednesday, April 25, 2018

ஜெனிவா பல்கலைக்கழகத்தின் பெருமையை உலகிற்கு உயர்த்திய ஈழத்து மாணவி


உலகிலேயே மிகவும் பிரபலமான சட்டம் பயிலும் மாணவர்களுக்காக Willem C. Vis International Commercial Arbitration Moot போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றது.
ஆங்கில மொழியில் நடைபெறும் இந்த போட்டிக்கு உலகெங்கும் பல பாகங்களிலும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.
உலகளாவிய ரீதியில் இப்போட்டி இரு பகுதிகளாக இடம்பெற்றன. ஒன்று எழுத்து, மற்றையது வாய்மொழி.
இதில் The University of Geneva's team குழு எழுத்தில் (Written pleadings) முதலிடத்தை பெற்று சரித்திரம் படைத்தது.
உலகெங்கும் இருந்து மொத்தம் 366 குழுக்கள் பங்கு கொண்ட நிலையில், வாய் (Oral pleadings) பேச்சில் 64ஆவது இடத்தை The University of Geneva's team பெற்றுள்ளது.
ஜெனிவாவில் சட்டத்துறையில் (Master in Business Law) மாஸ்ரர் இறுதியாண்டில் பயிலும் நம் தாய் நாட்டின் பெயர் பொறிக்கும் செல்வி சஜிகா இரத்தினம் முதலிடம் வகிக்கும் ஜெனிவா குழுவில் (The University of Geneva's Team) உள்ள ஆறு பெண்களில் ஒருவராக இருந்துள்ளார்.
கடல் கடந்து அகதிகளாக சென்றாலும் எதிர்காலச் சந்ததியினர் இங்கு அதிதியாக உயர் கல்வியுடன் வலம் வரும் காலம் ஆரம்பமாகிவிட்டது.
தாயகத்தின் பெருமையை உலகெங்கும் பரவியிருக்கும் நம் எதிர்காலச் சந்ததியினர் வளர்த்தெடுப்பார்கள் என்பது திண்ணம். தமிழ் மக்களின் சொத்து அன்றும் இன்றும் என்றும் கல்வியே. அது எந்த அலையடித்தாலும் கலையாது வளரும், வளர வேண்டும்.
பிரஞ்மொழியில் கற்று ஆங்கில மொழியில் (சர்வதேச போட்டிக்கான) தேர்வு எழுதி, தமிழ் மொழியில் செய்தி சொன்ன சஜிகா இரத்தினம்.
இந்த வெற்றி குறித்து சஜிகா இரத்தினம் தெரிவிக்கையில்,
“எழுத்தில் நாம் முதல் இடத்தைப் பெற்றோம். நாம் ஆறு பேரும் இரவு பகலாக சிறப்பாதொரு ஆக்கத்தை படைக்கப் பாடுபட்டோம். அப்போது எமக்கு முதல் இடம் கிடைக்கும் என்று எண்ணவில்லை.
ஆனால் நம்மால் முடிந்த உச்சத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அந்த கடும் உழைப்பு கைமேல் பலன் தந்தது.
வாய் மொழிவாதம் (Oral pleadings): இதில் நாம் 3ஆம் இடத்திற்குள் வராதபோதும், எழுத்து போட்டியில் நாம் முதல் இடம்பெற்றமையால் நம்மை கௌரவப்படுத்தும் முகமாக எமது குழுவையும் சிறப்பாக அறிவித்தார்கள்.
வாதாட்டத்தில் முதலாம் இடத்தை இந்தியா கைப்பற்றும் என நாம் எண்ணிய போதும் ரஷ்யாவே முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டது.
என்னைப் பற்றி கூறுவது என்றால் நான் Master in Business Lawவும் (இறுதியாண்டில்) Diploma in Accountiongs, Finance and Taxationவும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
என்னுடைய விருப்பம் Tax Lawவில் ஒரு பிரபல சட்டத்தரணியாக வரவேண்டும் என்பதே” என குறிப்பிட்டுள்ளார்.






you may like this video..


http://www.tamilwin.com/special/01/180751?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment