Monday, April 9, 2018

சக்கரை நோயை மாயமாக்கும் அற்புதம் இதில் உண்டு! இந்த ஒரு பொருளை கீழே வீசிடாதீங்க...


பழங்காலம் முதல், இன்றுவரை, எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமென்றால் மாம்பழம் மட்டும்தான்.
மாம்பழத்தில், அதன் சுவையுடன், அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவை. அவை என்னவென்று, பார்க்கலாம்.
மாம்பழத்தில், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ளன.
இந்த வைட்டமின்கள், கண்களுக்கும், உடல் சருமத்துக்கும், ஆற்றல் அளித்து, அவற்றின் பாதிப்புகளை சரிசெய்யும் தன்மைமிக்கவை.
மாம்பழம் மட்டும் உடலுக்கு நன்மைகள் தருவதில்லை, அதன் மரப்பட்டை, இலைகள், பூக்கள் போன்றவையும், மருத்துவ குணங்கள் மிக்கவைதான்.
அதைவிட, மாம்பழத்தின் கொட்டைகள், அதிக பலன்களைத் தரவல்லவை.
மாம்பழத்தின் சுவையைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளன.
1௦௦ கிராம், மாங்கொட்டையில் உள்ள தாதுக்கள், நீர் 2 கிராம், புரோட்டின் 36 கிராம், கொழுப்பு 13 கிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், நார்ச்சத்து .2 கிராம், கால்சியம் 21 கிராம், ஆஷ் 2 கிராம், மக்னீசியம் 34 கிராம், பாஸ்பரஸ் 20 கிராம், பொட்டாசியம் 158 கிராம், சோடியம் 7 கிராம், வைட்டமின் B1 . 8 கிராம், வைட்டமின் B2 .3 கிராம், வைட்டமின் B6 19 கிராம், வைட்டமின் B12 12 கிராம், வைட்டமின் C 56 கிராம், வைட்டமின் A 27 கிராம், வைட்டமின் E 3 கிராம், வைட்டமின் K 59 கிராம்.
இத்தனை சத்துமிக்க, மாங்கொட்டையை முறையாக உட்கொள்வதன் உடலின் பல்வேறு பாதிப்புகளை சரிசெய்துவிடும்.
உயர் இரத்த அழுத்தம்
இரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
கண் பார்வையும் தெளிவு பெறும். மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்தஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் எல்லாம், எட்டாத தூரத்துக்கு ஓடிவிடும்.
நீரிழிவு நோய்
சக்கரை பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு, மாங்கொட்டையின் பருப்பு, அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.
உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை, மிகாமல் பராமரிப்பதன்மூலம், உடலில் சர்க்கரை பாதிப்பின் அறிகுறிகளை, நெருங்கவிடாது மாம்பருப்பு தூள்.
புரதச்சத்து
உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். உடலில் அழியும் திசுக்களுக்கு மாற்றாக தினமும் உருவாகும் திசுக்களின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும், புரதம் இன்றியமையாத ஒன்றாகும்.
இரத்த ஹீமோகுளோபின் வலுப்பட தேவைப்படும் புரதம், நகம், முடி வளரவும் பயன்படுகிறது. பொதுவாக இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிகமாகக் காணப்பட்டாலும், பால் மற்றும் பீன்ஸ் வகை காய்கறிகளிலும் புரதச்சத்து நிறைய இருக்கிறது. அனைத்திலும் மேலாக, மாம்பருப்பில், புரதச்சத்து, அதிகமாக உள்ளது.
மாம்பருப்பு பொடியை, தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன்மூலம், உடல் வளர்ச்சி சீராகும்.

http://www.manithan.com/medical/04/168257?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment