ஜேர்மனியில் உள்ள அகதிகளின் வீடுகள் மற்றும் முகாம்களின் மீது நடத்தப்படும் தாக்குதல் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த தகவல் நாட்டின் பெடரல் குற்றவியல் காவல்துறையால் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் Frankfurter Rundschau பத்திரிக்கை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்தாண்டு நாட்டின் அகதிகள் முகாம்கள் மற்றும் வீடுகளில் 264 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
இதில் 251 தாக்குதல்கள் வலதுசாரி அடிப்படைவாத அமைப்புகளை சேர்ந்த ஆட்களால் நடத்தப்பட்டுள்ளது.
இதில் சில தாக்குதல்களுக்கு வெடி பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன, இந்த தாக்குதல்கள் பலவற்றில் உடமைகள் தான் சேதமடைந்துள்ளன.
கடந்த 2016-ல் அகதிகள் முகாம்கள் மீது 995 தாக்குதல்கள் நடத்தப்பட்டதும், 2015-ல் இந்த எண்ணிக்கையானது 1,031-ஆக இருந்ததும் தெரியவந்துள்ளது.
http://news.lankasri.com/germany/03/175938?ref=home-section
No comments:
Post a Comment