Tuesday, April 3, 2018

நெல்சன் மண்டேலாவின் புகழுக்கு களங்கம் விளைவித்த பெண்


கருப்பினத்தவர்களுக்காகப் போராடி வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த நெல்சன் மண்டேலாவுக்கு எந்தப் பெண் உறுதுணையாக நின்றாரோ அதே பெண் அவரது புகழுக்கு களங்கம், உண்டாக்கவும் காரணமாக இருந்த கருப்புப் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தி.
நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியான வின்னி மண்டேலாவின் மறைவையடுத்து பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டாலும் தென்னாப்பிரிக்காவில் பலர் அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்னும் அதிர்ச்சி செய்தியைத் தருகிறார் பிரபல பத்திரிகையாளர் ஒருவர்.

அந்தக் கட்டுரையில், இறந்தவர்களைப் பற்றி மோசமாகப் பேசக்கூடாதுதான், என்றாலும் நான் ஒரு விதி விலக்காக சில உண்மைகளைக் கூற விரும்புகிறேன் என்று தன் கட்டுரையைத் தொடங்கும் அவர்,
“தன் வாழ்நாளில் எந்த விடயத்தை பிஸியாக செய்து கொண்டிருந்தாரோ, தான் இறப்பதற்குமுன்வரை அதையேதான் அவர் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்... அது, தனது பெயருக்குப் பின்னால் இருந்த மண்டேலா என்னும் பெயரைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சித்தல் என்னும் விடயம்தான்”
என்கிறார் அந்தப் பத்திரிகையாளர். கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று 17 ஆண்டுகள் ஆன பின்னும் அவரது வீடு ஒன்றை சட்டப்பூர்வமாக பெறுவதற்காக கசப்பான ஒரு சட்ட யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார் வின்னி மண்டேலா என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏற்கனவே Evelyn என்னும் பெண்ணை மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நெல்சன் மண்டேலாவின் வாழ்வில் குறுக்கிட்டார் வின்னி.

1958 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நெல்சன் சிறை செல்வதற்கு முன் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
1962 ஆம் ஆண்டு நெல்சன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதுதான் வின்னி மண்டேலா உலகம் முழுதும் தெரியத் தொடங்கினார்.
இன வேறுபட்டிற்காக குரல் கொடுத்த வின்னி ”தீப்பெட்டிகளும் நெக்லஸ்களும்” என்னும் விடயத்திற்காக எதிர் மறையாக புகழ்பெறத் தொடங்கினார்.
அதாவது தனது எதிரிகளின் கழுத்தில் பெட்ரோல் நிரம்பிய டயர்களை மாட்டி தீ கொளுத்தி கொல்வதுதான் அது.
கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னும் அரசாங்கத்தால் தொல்லைகளுக்குள்ளானார். பின் 1986 ஆம் ஆண்டு தன் சொந்த ஊர் திரும்பிய வின்னி கருப்பினத்தவர்களுக்காகவும் தனது கணவரின் விடுதலைக்காகவும் போராடும் ஒரு பெண்ணாக வெளி உலகுக்கு காட்டப்பட்டார்.

ஆனால் உண்மையில் தனது கணவரின் பெயரை பயன்படுத்திக் கொண்ட வின்னி வன்முறையிலும் கொலைக் குற்றங்களிலும் ஈடுபடலானார்.
மண்டேலாவின் பெயரால் ஒரு கால் பந்துக் குழுவை அமைத்த அவர் அந்தக் குழுவை தனது தனிப்பட்ட பாதுகாப்புக் குழுவாகப் பயன்படுத்திக் கொண்டார்.
வெள்ளையர்களுக்கு எதிராக போராடாத கருப்பினத்தவர்களைத் இந்தக் குழு தண்டித்தது - ”தீப்பெட்டிகளாலும் நெக்லஸ்களாலும்” .
இந்தக் குழு பல கொலை, கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும், Stompie Seipei Moeketsi என்னும் 14 வயது சிறுவனின் கொலையில் சிக்கிக் கொண்டது.
வின்னியின் வீட்டினருகே சித்திரவதை செய்யப்பட்டு கழுத்தறுபட்ட நிலையில் அவனது உடல் கண்டெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட வின்னியின் பாதுகாவலர்களில் ஒருவன், வின்னிதான் அவனை கொலை செய்ய கட்டளையிட்டதாக வாக்குமூலம் கொடுத்தான்.
1990 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டபோது அவரது கையைப் பிடித்தபடி நடந்த வின்னி கெமராவைப் பார்த்து புன்னகைத்த புன்னகை உண்மையானது அல்ல.
1996 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் ஒரு பேட்டியில் “மண்டேலா நம்மைக் கைவிட்டு விட்டார்” என்று கூறினார் வின்னி.
1990க்கு 1996க்கும் இடையே நிகழ்ந்த மோசமான நிகழ்வுகளை வாய் விட்டுக் கூற இயலாது. ஒரு காலத்தில் மண்டேலாவுக்கு இனிமையானவளாக இருந்த வின்னி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேதனையாக மாறிவிட்டார்.
அவரால் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பலரும் அவரிடம் கண்ணீர் மல்க தான் செய்த தவறுகளுக்காக நீதியின் முன் நிற்கும்படி கெஞ்சினார்கள். கடைசி வரை அவர் மாறினாரா என்பது தெரியாது.

http://news.lankasri.com/othercountries/03/175538?ref=recommended3

No comments:

Post a Comment