Friday, March 23, 2018

போராளி மகளின் உடலை மீட்டுத்தாருங்கள்: பிரித்தானிய தந்தையின் உருக்கமான கோரிக்கை


சிரியாவில் துருக்கிப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் குர்திஷ் பெண்கள் ஆயுதப் படையைச் சேர்ந்த பிரித்தானிய பெண் போராளி உயிரிழந்தார்.
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆப்ரின் நகரை மீட்க கடந்த 2 மாதங்களாக துருக்கி தலைமையிலான படையும், சிரியா கிளர்ச்சி படையும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி சிரியா நாட்டில் குர்திஷ் போராளிகளின் மையப்பகுதியாக திகழ்ந்த ஆப்ரின் நகரை கைப்பற்றி விட்டதாக துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில், ஆன்னா கேம்ப்பெல் (Anna Campbell) என்ற 26 வயது இங்கிலாந்து இளம் போராளி உயிரிழந்தார்.
உயிரிழந்த தனது மகளின் உடலை, தன்னிடம் மீட்டுத்தாருங்கள் என்று போராளியின் தந்தை Dirk Campbell அந்நாட்டுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்,
குர்திஷ் பெண்களைப் பாதுகாப்பதற்காக ஒய்.பி.ஜே. என்ற ஆயுதப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஆன்னா கேம்ப்பெல் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகது மகளின் இறப்பு தனக்கு வேதனையளிப்பதாகவும், இறந்துபோன மகளின் உடலை என்னிடம் கொண்டு வந்து தாருங்கள் என பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து Dirk Campbellகூறியதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தான் எனது மகள் என்னோடு பேசினாள், அங்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும் தான் எவ்வித ஆபத்திலும் சிக்கவில்லை எனவும் கூறினாள்.
மேலும், அங்கு சிரமப்படும் குர்திஷ் பெண்களை பாதுகாப்பதே எனது நோக்கம், அதற்காகவே நான் ஆயுதத்தை கையில் ஏந்தினேன் என தெரிவித்தாள்.
இவ்வாறு கூறி இரண்டு மாதத்துக்குள் அவள் இறந்துவிட்டாள். அவளது உடலையாவது மீட்டுத்தாருங்கள் என வெளியுறவு அமைச்சத்திடம் கோரிக்கை வைத்தால், இது அரசியல் விவகாரம், இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட முடியாது என காலம் கடத்துகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.



http://news.lankasri.com/uk/03/174627?ref=ls_d_uk

No comments:

Post a Comment