Thursday, March 22, 2018

கனேடிய குடியுரிமை பெற முயற்சித்த 51 பேரின் நிலை! இலங்கையரின் மோசமான செயல்


கனடாவில் தொழில் பெற்றுக் தருவதாக கூறி 51 பேரை ஏமாற்றிய கனேடிய பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த பாவனந்தம் பிரேமோஹன் என்பவருக்கு எதிராக நேற்று முன் தினம் திருச்சி குற்ற விசாரணை பிரிவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரால் 51 பேரிடம் 16 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குற்றச்சாட்டுக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் தாக்க செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கனேடிய பிரஜையான இலங்கையை பாவனந்தம் பிரேமோஹன் என்பவரே இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக திருச்சி வன்னாரப்பேட்டையை சேர்ந்த ஆர்.ராஜன் என்ற 41 வயதுடைய அகதி குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய பாவனந்தம் பிரேமோஹன் என்பவரும், ராஜன் என்ற அகதியும் நண்பர்களாகும்.
தான் கனடாவில் தொழில் பெற்று தவருவதாகவும், அதற்காக 30000 ரூபாய் பணம் வழங்குமாறும் பாவனந்தம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 300000 ரூபாய் பணத்தை செலுத்திய ராஜன் மேலும் 50 பேருக்கு இந்த தொழில் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர்களையும் 3000 ரூபாய் செலுத்துமாறு கூறியுள்ளார். இந்த அனைத்து சம்பவங்களும் 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் இடம்பெற்றுள்ளது.
பின்னர் பாவனந்தம் 15,30,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு கனடாவுக்கு சென்றுள்ளார். எனினும் அவர் கொடுத்த வாக்குறுதியை இன்னமும் காப்பாற்றவில்லை. இந்நிலையில் இந்த பணத்தை எப்படியாவது திரும்ப பெற்று கொள்ள எண்ணிய ராஜன் சட்ட ரீதியான உதவியை நாடியுள்ளார்.
பாவனந்தத்திற்கு எதிராக ஒரு பார்வை சுற்றறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான தகவல்களைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

http://www.tamilwin.com/canada/01/177736?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment