Thursday, January 18, 2018

ஜேர்மனியில் இந்து கோயில்: அனுமதி வழங்கிய பசு மாடு


தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் கோயில் கட்டுவதற்கு உகந்ததா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு பசுவைக் கொண்டு வந்து அந்த இடத்தில் விடுவது இந்துக்களின் வழக்கம்.
அந்தப் பசு அந்த இடத்தில் அமைதியாக இருந்தால் அந்த இடம் பொருத்தமான இடம்என்றும் பசு அமைதியற்று இருந்தால் அங்கு வீடோ கோயிலோ கட்டக்கூடாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

இதன்படி ஜேர்மனியிலுள்ள Bremen நகரில் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்துள்ள இந்துக்கள் ஒரு பசுவைக் கொண்டு வந்தார்கள். Madel என்ற பெயரை உடைய அந்த பசு அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் அமைதியாக நின்றது.
எனவே அவர்கள் அந்த இடத்தில் கோயில் கட்டுவதென முடிவெடுத்துள்ளதான Pathmakaran Pathmanathan என்பவர் தெரிவித்துள்ளார்.
Bremen நகரில் 300 இந்துக் குடும்பங்கள் உள்ள நிலையில், ஜேர்மனியில் சுமார் 100,000 இந்துக்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.


http://news.lankasri.com/germany/03/170085?ref=ls_d_special

No comments:

Post a Comment