Wednesday, December 20, 2017

ஆண்களை பணம் கொடுத்து வாங்கும் இனம் நாம்,இவர்களோ பெண்களை வாங்கும் இனம்!


காய்கறி, பழங்கள், ஆயுதங்கள் விற்கும் சந்தைகளை அவதானித்திருக்கும் நீங்கள் மணப்பெண்களை சந்தை போட்டு விற்கும் நிகழ்வினை கேள்விப்பட்டதுண்டா?

பல்கேரியாவின் ஸ்டாரா ஜாகோர் என்னும் இடத்தில் பெண்களை மணப்பெண்ணாக அலங்கரித்து அங்கு ஏலத்திற்கு விடுகின்றனர்.
எல்லா வயதிலான பெண்களும் இந்த சந்தைக்கு வருகிறார்கள் எனிலும், பதின் வயது பெண்கள் தான் அதிக விலைக்கு வாங்கப்படுகிறார்கள்.

 காரணம் அவர்கள் தான் கற்புடன் இருப்பார்கள் என்பதே... மணமகன் முதலில் தனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்வார். பிறகு அந்த பெண்ணுடன் பேச சிறிது அவகாசம் அளிக்கப்படும். பெண்ணுக்கு பிடித்திருந்தால் அந்த ஆணை ஏற்றுக் கொள்வார். பிறகு பேசிய பணம் அந்த பெண் வீட்டாருக்கு அளிக்கப்படும்.

பல மணமகன்கள் ஒரே பெண்ணை விரும்பினால் பிறகு அந்த பெண்ணின் விலை தானாக அதிகரிக்க ஆரம்பிக்கும். ஏறத்தாழ ஏலம்விடுவது போல. இதே போன்று ஒரு சந்தை மட்டுமல்ல அங்கு ஏழை குடும்பங்கள் ஆங்காங்கே சந்தை போட்டு விற்பனை செய்கின்றனர்.

வருடத்திற்கு 4 முறை நடைபெறும் இந்த சந்தைக்கு பெண்கள் தனியாக வரமுடியாது.. அவர்கள் பெற்றோருடன் மட்டுமே வர வேண்டும். பல்கேரியாவை சேர்ந்த அனைவரும் இம்மாதிரியாக செய்வதில்லை. அங்குள்ள ஒருபிரிவினர் மட்டுமே இவ்வாறு சந்தையில் மணப்பெண்களை விற்று வருகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் இவர்கள் தனது மகள்கள் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் எந்த கஷ்டமும் இன்றி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்து வருகின்றனர்.
ஆண்கள் வரதட்சணை எடுத்து வந்த பெண்ணை வாங்கினாலும், அப்பெண்ணின் சம்மதம் இல்லாமல் விற்க முடியாதாம். இவ்வாறு பல விதிமுறைகளை இவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

http://www.manithan.com/othercountries/04/154280

No comments:

Post a Comment