Friday, December 1, 2017

இனி ஈஸியா குடியுரிமை பெறலாம்: கை நிறைய சம்பளத்துடன் வரவேற்கும் கனடா

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வாரி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் கெடுபிடி காட்டுகின்றன.

ஆனால் இந்த கெடுபிடிகளை எல்லாம் உடைத்து, கனட அரசு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

இதன் பயணாக அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும், 10 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு கனடா குடியுரிமை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2018-ஆம் ஆண்டு 3,10,000 நபர்களையும், 2019-ஆம் ஆண்டு 3,30,00 நபர்களையும், 2020-ஆம் ஆண்டு 3,40,000 நபர்களுக்கும் அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கனடாவின் வணிகங்களுக்கு 4,50,000 ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் இங்கு குடிபெயர்வதில் ஐரோப்பியர்களுக்கு முதலிடம், ஆப்பிரிக்கர்களுக்கு இரண்டாமிடம், ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு மூன்றாம் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கனடாவில் ஆண்டுதோறும் 0.8 சதவீதம் மக்கள் தொகை அகதிகளாக அதிகரித்து வருகிறது. இது தற்போது 0.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், கனடாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி அளிக்கப்படுவதாகவும், எளிதில் இங்கு குடியேறலாம் எனவும் கூறப்படுகிறது.
http://news.lankasri.com/canada/03/166444

No comments:

Post a Comment