Wednesday, December 13, 2017

64 வயது முதியவருடன் காதலில் விழுந்த 21 வயது இளம்பெண்


அமெரிக்காவில் பேஸ்புக்கில் ஏற்பட்ட அறிமுகத்தால் 64 வயது நபரும், 21 வயது இளம்பெண்ணும் காதலர்களாக மாறியுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு, Alexandria Gayton-Gutierrez என்னும் 21 வயது இளம்பெண்ணுக்கு, Jonathan Geffner என்னும் 64 வயது முதியவர் பேஸ்புக்கில் ‘Friend Request' அனுப்பியுள்ளார்.

பின்னர், Alexandria அந்த Request-ஐ ஏற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் நண்பர்களாகி, தினமும் உரையாடி வந்துள்ளனர். மேலும், Video Chatting-யும் செய்துள்ளனர்.

அப்பொது, Jonathan தனக்கு இரண்டு மகள்கள் இருப்பதாக கூறியுள்ளார். Alexandria-வும் தான் Texasயில் வசிப்பதாகவும், கல்லூரி செல்லும் மாணவி என்றும் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு மாதங்களில் Jonathan-ஐ மிகவும் பிடித்திருப்பதாகவும், அவரை விரும்புவதாகவும் Alexandria அவரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த Jonathan, Alexandria-விடம் அவளை விட தான் மூன்று மடங்கு வயதில் பெரியவர் என்று கூறியுள்ளார்.

ஆனால், Alexandriaவின் அன்பைக் கண்டு பின்னர், தானும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தனது மகளுடன் San Antonioவிற்கு சென்று Alexandria மற்றும் அவளின் பெற்றோருடன் சுற்றுலா சென்றுள்ளார்.

ஆனால், Alexandria-வின் பெற்றோர் இவர்களை நண்பர்கள் என்று முதலில் நினைத்துள்ளனர். பின்னர், இவர்கள் காதலிப்பதை புரிந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து Jonathan கூறுகையில், ‘எங்களை ஒன்றாக பொதுவெளியில் பார்க்கும் மக்கள், எங்களை தந்தை, மகள் என்று நினைத்துவிடுவர்.

ஆனால் அதைப் பார்க்கும் போது நாங்கள் சிரித்து விடுவோம்’ என தெரிவித்துள்ளார். Jonathan-ஐ விடவும் Alexandriaவின் பெற்றோர் வயதில் சிறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment