Thursday, November 9, 2017

"வடகொரியாவில் வறட்சி பேரழிவில் சிக்கி 18 மில்லியன் மக்கள் சாவின் விளிம்பில்-ஆய்வறிக்கை ."


வடகொரியாவில் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்புக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்படுவதால் வறட்சி பேரழிவில் சிக்கி 18 மில்லியன் மக்கள் சாவின் விளிம்பில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
வடகொரியாவின் வறட்சி பேரழிவு அப்பாவி பச்சிளம் குழந்தைகளை காவு வாங்கும் முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மன்ற தலைவர் அந்த நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு திட்டத் தலைவர் David Beasley, வடகொரியாவின் அணு ஆயுத பேரார்வத்தை மட்டுப்படுத்தாத வரை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் 18 மில்லியன் மக்களுக்கும் உணவு போய் சேர்வது கடினம் என்றார்.
மட்டுமின்றி ஊட்டச்சத்து குறைபாடில் சுமார் 200,000 சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகொரியாவுக்காக 52 மில்லியன் டொலர் தொகையை திரட்ட திட்டமிட்டுள்ள ஐக்கிய நாடுகள் மன்றம், இதுவரை வெறும் 15 மில்லியன் டொலர் மட்டுமே திரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி கடந்த ஆண்டை விடவும் வடகொரியா இந்த ஆண்டு உணவு தானியங்கள் உற்பத்தியில் 30 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1994 மற்றும் 98 ஆம் ஆண்டுகளில் வடகொரியாவில் பரவிய கொள்ளை நோய் தாக்குதலுக்கு 2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட நிலையில்,
1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 5 மில்லியன் மக்கள் போதிய உணவின்றி பட்டிணியால் தவித்து வந்தனர்.
இந்த எண்ணிக்கையானது 2014 ஆம் ஆண்டு 10.4 மில்லியன் என பெருகியதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


http://news.lankasri.com/othercountries/03/136334

No comments:

Post a Comment