Monday, October 30, 2017

கொஞ்சமாக முடி கொட்டும் போதே இதை செய்துவிடுங்கள்!


முடி உதிர்வு பிரச்சனை தொடங்கும் போதே இயற்கையில் உள்ள சில மருத்துவத்தை பின்பற்றினால் பொடுகுத்தொல்லை, முடி வறட்சி போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.
முடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்?
  • கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, அடர்த்தியாக வளரும்.
  • தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெய்யை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து, முடி உதிர்வு நின்றுவிடும்.
  • கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதை கொண்டு மசாஜ் செய்தால், முடி கருமையாகும்.
  • செம்பருத்தி பூக்களை சூடான எண்ணெயில் போட்டு ஊற வைத்து அதை தினமும் தலைமுடிக்கு தடவி வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.
  • எலுமிச்சை பழத்தின் விதையுடன் மிளகு சேர்த்து அரைத்து அதை முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.
  • பூசணி கொடியின் கொழுந்தை எடுத்து நன்றாக பிழிந்து அதனை தலையில் தடவி வந்தால், முடி நன்கு வளரும்.
  • கீழாநெல்லியின் வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி அதை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
  • வேப்பிலையை நன்றாக வேக வைத்து மறுநாள் குளிக்கும் போது அந்த நீரை கொண்டு தலைமுடியை அலசினால் முடி கொட்டுவது விரைவில் நின்று விடும்.
  • தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment