Sunday, October 29, 2017

பாரீஸ் மெட்ரோவில் இந்த விதிமுறைகள் பற்றி தெரியுமா?


பாரீஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு எடுக்க வேண்டியது கட்டாயம்
பொதுவாகவே ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு தேவை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இங்கு பலர் இதை மீறுகிறார்கள். அதாவது, டிக்கெட் எடுத்து செல்லும் பயணிகள் பின்னாலேயே எடுக்காதவர்கள் பலர் சென்று ரயிலில் ஏறுவது அங்கு தொடர்கதையாகி வருகிறது.
அதே போல டிக்கெட் எடுக்காதவர்கள் தடுப்பு சுவர்களை தாண்டி செல்வதும் நடக்கிறது.
ஏற/இறங்க கூடாது
ரயில் நிலையத்துக்கு வந்த ரயில் நின்ற பின்னர் சில நொடிகள் கழித்து சத்தமாக ஹாரன் அடிக்கப்படும்.
அதற்கு பின்னர் பயணிகள் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது
ரயில் இருக்கைகள்
ரயில் இருக்கைகளில் உட்கார குறிப்பிட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
  • போர் மற்றும் ராணுவத்தில் ஈடுபட்டு ஊனமானவர்கள்
  • கண் பார்வையற்றவர்கள்
  • ஊனமான தொழிலாளர்கள்
  • கர்ப்பிணி பெண்கள்
  • நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள்
  • 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்
நாய்கள்
45 செண்டிமீட்டர் அகலத்துக்கு குறைவான நாய்களை ரயிலில் உடன் அழைத்து செல்லலாம். ஆனால் நாயானது மற்ற பயணிகளுக்கு தொல்லை கொடுக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
கைகள் இல்லாதவர்கள்
இரண்டு கைகளும் இல்லாதவர்கள் பாரீஸ் மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம்.
நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள்
நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் பயணம் இலவசம். ஆனால் அவர்களுக்கு தனி இருக்கை கிடையாது, அப்படி தனி இருக்கையில் உட்கார வேண்டுமெனில் பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.

http://news.lankasri.com/france/03/135533

No comments:

Post a Comment