Wednesday, October 4, 2017

"சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்று சிங்களத் தலைவர்கள் சொல்லித் தான் ஆக வேண்டும்"


"சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்று தான் சிங்களத் தலைவர்கள் சொல்வார்கள். அவர்கள் அப்படி சொல்லித் தான் ஆக வேண்டும் என இலங்கைத் தழிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்."

சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்று தான் சிங்களத் தலைவர்கள் சொல்வார்கள். அவர்கள் அப்படி சொல்லித் தான் ஆக வேண்டும் என இலங்கைத் தழிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

வந்தாறுமூலை மாருதி பாடசாலையின் வருடாந்த வருட இறுதி கலை நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,


சிங்களத் தலைவர்கள் சிலர் சமஷ்டி கொடுக்கப்படவில்லை ஒற்றையாட்சி தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று சொல்கின்றார்கள்.

மக்களுக்கு அவர்கள் அப்படித் தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஒற்றையாட்சி என்பது பிரிந்து செல்லாத ஒன்று என்றும், சமஷ்டி என்பது பிரிந்து செல்லும் ஒன்று என்று தான் சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சமஷ்டி என்பது பிரிந்து செல்வது அல்ல. இங்கு சிங்களத் தலைவர்களால் சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்கின்ற சொல்லானது பிரிந்து செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்கின்ற செய்தி மாத்திரம் தான்.

அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஏனெனில் இந்த அரசியலமைப்பு பிரிந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அங்கு சமஷ்டி இருக்கும்.

அதிகாரங்கள் நாங்கள் கேட்டுக் கொண்ட அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, பரவலாக்கப்பட்டிருக்கின்றன. மாகாண ஆளுநர் அரசியல் நடவடிக்கையிலே ஈடுபடக் கூடாது என்கின்ற விடயம் வருகின்றது.

இவ்வாறு சமஷ்டிக்கான விடயங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்று சிங்களத் தலைவர்கள் சொல்வார்கள்.

இவைகள் ஒரு வகை உத்திகள். ஒரு பொருள் ஒருவரிடம் இருக்கின்றது. அந்தப் பொருளை மற்றவருக்குக் கொடுப்பதற்கு தீர்மானித்த பிறகு கொடுப்பதற்கு விருப்பமில்லாதவர்களுக்கு சில வார்ததைகளைப் பயன்படுத்த வேண்டும்.

அது தான் இப்போது இந்த அரசியல் அமைப்பிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்று தான் சிங்களத் தலைவர்கள் சொல்வார்கள். அவர்கள் அப்படி சொல்லித் தான் ஆக வேண்டும்.

சமஷ்டி கொடுக்கப்பட்டு விட்டது என்பது தான் உண்மை. அதனை நாங்கள் பூதாகாரமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எமது வரலாறுகள் பல பாடங்களை எமக்குச் சொல்லியிருக்கின்றது.

எனவே இந்த அரசியல் அமைப்புச் சட்டத்திலே சமஷ்டி இருக்கின்றது, நாங்கள் கேட்ட விடயங்கள் இருக்கின்றன. இப்போது இருக்கின்ற நிலையிலே அதியுச்சமான விடயங்களை எமது தலைவர்கள் இதில் உள்ளடக்கியிருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/160661



No comments:

Post a Comment