Wednesday, October 4, 2017

உயிருக்கு போராடியவரை பர்தா கழற்றி காப்பாற்றிய பெண்: அதன் பின் அவருக்கு கிடைத்த கவுரவம்


அமீரகத்தில் ஆஜமன் நகரில் உள்ள சாலையில் ட்ரக்குகள் மோதிக்கொண்டதில், அதில் இருந்த இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஜவாஹெர் என்ற இளம் பெண் தனது பர்தாவை கழற்றியதோடு மட்டுமின்றி, தன் தோழியின் பர்தாவையும் கழற்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவரை காப்பாற்றினர்.

இது தொடர்பான செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதால், ஜவாஹெர் மற்றும் தோழிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் துணிச்சலாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்டு இந்திய டிரைவரை காப்பாற்றிய ஜவாஹெர்க்கு ஐக்கிய அமீரக அரசு தைரியப் பெண் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.


இது குறித்து ஜவாஹெர் கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் பலர் இருந்த போதும், அவர்கள் யாரும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

இதனால் தான் அவரை காப்பாற்ற முடிவு செய்தேன். உயிருக்கு போராடிய அவரை சற்று அமைதியாக இருங்கள், நீங்க பிழைத்து விடுவீர்கள், மீட்பு படையினர் வந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறி அவருக்கு நம்பிக்கை அளித்தேன்.

அதன் பின் அவர்கள் வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருந்த போதும் ஒரு மனிதரின் உயிரை காப்பாற்றும் சக்தியை எனக்கு அளித்த இறைவனுக்கே நன்றி எனவும் எல்லா புகழும் அவருக்கே சேரும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் ஜவாஹெரைகவுரவிக்க முடிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/othercountries/03/133740

No comments:

Post a Comment