Wednesday, August 23, 2017

ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளை தடுத்துவைப்பதற்கான உரிமையுள்ளதாக தெரிவிக்கும் பிரித்தானிய கடிதங்கள்!

ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளை தடுத்துவைப்பதற்கான உரிமையுள்ளதாக தெரிவித்து உள்துறை அமைச்சு அனுப்பிய கடிதங்களால் சர்ச்சை மூண்டுள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கும் பின்லாந்தை சேர்ந்த கல்விமான் ஓருவரிற்கு அவ்வாறன கடிதத்தை உள்துறை அமைச்சு அனுப்பிவைத்துள்ளமை அம்பலமாகியுள்ளதை தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரித்தானியா பிரஜையை மணமுடித்துள்ள பின்லாந்தை சேர்ந்த கல்விமான் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இங்கிலாந்திலிருந்து வெளியேறுவதற்கு ஓரு மாத கால அவகாசம் வழங்கபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சிடமிருந்து 100 பேர் வரை இவ்வாறான கடிதத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த கடிதங்கள் தவறுதாலாக அனுப்பப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளின் உரிமை தொடர்பில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சக பேச்சாளர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
கடிதங்களை பெற்ற அனைவரையும் தொடர்புகொள்ளப்போவதாகவும் அந்த கடிதத்தினை புறக்கணிக்குமாறு கோரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தவறுதலாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்ன தவறு இடம்பெற்றுள்ளது என ஆராய்கின்றோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
http://www.canadamirror.com/uk/04/137414

No comments:

Post a Comment