Wednesday, August 23, 2017

பெண்டாட்டி தாசன் துளசி தாசனானமை!

அவனுக்கு திருமண வயது வந்த உடன் ஒரு அழகிய பெண்ணை அவனுக்கு 
மனைவியாக கட்டிவைத்தார்கள்.
திருமணம் ஆன பின் ஒரு கணம் கூட பார்க்காமல் இருக்க
மாட்டான் அவளை சீண்டிக் கொண்டு இருப்பான் அவளும் சிரித்து
கொண்டு இருப்பாள். காலம் நேரம் பார்ப்பதில்லை.
அவர்கள் அதிகமாக கொஞ்சுவது பெற்றோர்களுக்கும்
உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. அவளுக்கு தாய் வீட்டிற்கு
செல்ல ஆசை வந்தது கணவனிடம் மிக அன்போடு ஏங்க நான்
ஓன்னு கேட்டா கோவிச்சிக்கமாட்டிங்களா என்று அன்போடு
கேட்டாள் மனைவி.
உனக்கு என்ன வேண்டும் சொல்லு செல்லம் என்று மனைவிடம் கேட்டான்.
ஒரு வாரம் உங்களை விட்டு எங்க அம்மா வீட்டுக்கு போக போகிறேன்.
ஐய்யோ ஒரு வாரமா! என்னால் உன்னை விட்டு ஒரு நிமிடம் கூட
பிரிந்து இருக்க முடியாது என்று அவன் கூறினான்.
அவளும் தன் தாய் வீட்டிற்கு போய் விட்டாள். இவனும் மனைவியை
பிரிந்த வருத்தத்தில் இருந்தான். இரண்டு மூன்று நாட்கள் தூக்கம் வரவில்லை.
மனைவி பக்கத்தில் தூங்குவது போல நினைத்து ஏமாந்து போனான்.
அவன் இருக்கும் ஊரில் இருந்து 10 மைல் தொலைவில் இருந்தது
மனைவின் ஊர். தனது வீட்டில் "எனக்கு வெளி ஊரில் வேலை இருக்கிறது
இன்று நான் வீட்டிற்கு வரமாட்டேன்", என்று சொல்லி விட்டு புறப்பட்டான்.
நடு இரவில் மாமியார் வீட்டின் கதவை கூட தட்டாமல் சாரலம்
மேல் ஏறி மனைவியின் அறையிஙல் குதித்தான். மனைவி சத்தம் போடாமல் இருக்க
மனைவியின் வாயை முடி நான் தான் உன் கணவன் என்று கூறினான்.
கிழக்கே வெள்ளி முளைக்கும் வரை அவளுடன் படுத்து விட்டு வீடு திரும்பினான்.
இப்படி ஒரு நாள் இல்லை பல நாட்கள் நடந்தது. மனைவி நான் இன்னும் இரண்டு
நாட்களில் வீடு திரும்பி விடுவாள் என்று கூறினாள். ஆனால் அவனுக்கு தாங்க
முடிவில்லை.
அன்று அமாவாசை தினம் எங்கும் ஒரே இருட்டு வானத்தில் இருந்தது
நட்சத்திரம் கூட தெரியவில்லை. போகும் வழியில் சிறு சிறு தூறல்கள்
போட மேகங்கள் புயலோடு மழை பெய்ய தோடங்கியது.
மின்னலும் இடியும் தொடர்ந்தது. அப்பொழுது அவன் முழுமையாக
நனைந்து வழக்கமாகக் சாரலத்தின் வழியாக செல்ல தொடங்கினான்.
அப்பொழுது அவன் கயிறு என்று நினைத்து பாம்பை பிடித்து
கீழே குதித்தான். மனைவி பயந்து நடுங்கினாள்.
பாம்பு என்று அலறினாள், அத்தோடு மட்டுமில்லை அவனை கோபமாகப்
பார்த்து இந்த உடம்பிற்காக அலைந்து மழையும் பார்க்காமல் காமமாய்
அலைகிறாயே? என்று கத்தினாள்.
அவன் சொன்னான்; உன் அழகை விட இந்த உலகில் எனக்கு எதுவும்
இல்லை. என்று அவள் கன்னத்தில் கையை வைத்தான். அவள் அவனை
மறுகன்னத்தில் ஓங்கி அடித்தாள். அவள் கோபத்துடன் அழுகி போகிற
உடம்புக்கு ஆசை படுகிறாயே?.
என்னை விட கிருஷ்ணன பகவான் அழகா இருக்கிறானே அவனை காதலி.
அவன் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைமேல் ஏதோ மின்னல் உறைத்தது.
அவள் கதவை திறந்து இனி நீ வராதே என்று வாசல் வழியே அனுப்பினாள்.
அவன் யார்? அவன் தான் துளசிதாசன். அன்றையில் இருந்து முழுவதுமாக
உட்காந்து துளசி ராமாயணத்தை எழுதி முடித்தவன். வட நாட்டின்
ராமசரிதமானஸ் என்று ஹிந்தியில் எழுதிய ராமாயணத்தை இன்றும்
படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment