Thursday, August 24, 2017

சுவிஸில் நிலச்சரிவு: குடிமக்கள் அவசரமாக வெளியேற்றம்

சுவிட்சர்லாந்து நாட்டில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானதை தொடர்ந்து குடிமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Pontresina என்ற பகுதியில் தான் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மூன்று சகோதரர்கள் மலையேறும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
பிற்பகல் நேரத்தில் திடீரென மலைமேல் இருந்த பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.
பாறைகள் உருண்டு வருவதை கண்ட இரண்டு சகோதர்கள் அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பான இடத்திற்கு சென்று உயிர் தப்பியுள்ளனர்.
ஆனால், 35 வயதான மூத்த சகோதரர் மீது பாறை ஒன்று விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் இரண்டு பேரையும் மீட்டு ஹெலிகொப்டரில் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இதே மாகாணத்தில் உள்ள Bondo என்ற பகுதியிலும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.
இவ்விபத்தை தொடர்ந்து சுமார் 100 கிராம மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
எனினும், இவ்விபத்தில் 12 வீடுகள் சேதம் அடைந்ததாகவும், யாருக்கும் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/swiss/03/131316

No comments:

Post a Comment