Friday, August 25, 2017

விலங்குகளைப் போன்று 5 வருடங்களாக மரத்தில் கட்டிவைக்கப்பட்ட சிறுவர்கள்..!


மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களை அவர்களது குடும்பத்தினர் கடந்த 5 வருடங்களாக மரத்தில் விலங்குகளை போன்று கட்டி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இரு வெவ்வேறு கிராமங்களில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உதய்பூர் நகரில் உள்ள பெய்டி என்ற கிராமத்தை சேர்ந்த ஜீவா ராம் என்ற 11 வயதுச் சிறுவன் போலியோ மற்றும் மனநல குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரை சரியாக கவனிக்க முடியாத காரணத்தால் இவரது தந்தை வேலைக்குச் செல்லும் போது வீட்டின் வெளியில் ஒரு மரத்தில் மகனை கட்டி வைத்துவிட்டு சென்றுவிடுவார்.
மனநல குறைபாட்டோடு இருப்பதால் வெளியில் விட்டால் ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற காரணத்தினால் தான் வெளியில் விடுவதில்லை அத் தந்தை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கொள்யாரி கிராமத்தை சேர்ந்த உமேஷ என்ற 8 வயதுச் சிறுவனின் பெற்றோர் எச்ஐவி பாதிப்பால் இறந்துவிட்டனர். இதனால் உமேஷை அவரது பாட்டி வளர்த்து வந்தார்.
மூன்று வயது வரை நன்றாக இருந்த உமேஷ், தங்களது பெற்றோர்களின் மரணத்திற்கு பின்னர் மனநோயாளி ஆகிவிட்டார். இவரை பராமரிப்பது சிரமம் என்பதால் இவ்வாறு மரத்தில் கட்டிவைத்துள்ளேன் என இச் சிறுவனின் பாட்டி தெரிவித்துளளார்.
இந்த இரண்டு சிறுவர்களை விலங்கினங்கள் போன்று இப்படி மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியது மனிதாபிமானமற்ற முறை என்று கூறியு தன்னார்வ தொண்டு அமைப்பு இவர்கள் இருவரையும் மீட்டு தங்கள் பாதுகாப்பில் எடுத்துள்ளனர்.
http://www.jvpnews.com/india/04/137698

No comments:

Post a Comment