Friday, July 21, 2017

கடலுக்குள் புதைந்து கிடக்கும் புதிய உலகம்! விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆதாரங்கள்

காணாமல் போன MH370 மலேசியா விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடலுக்குள் புதைந்து கிடைந்த புதிய உலகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் புதிய உலகம் தொடர்பிலான வரைபடத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
எரிமலைகள், பள்ளத் தாக்குகள், முகடுகள் உள்ளிட்டவைகள் இருப்பது போன்ற வரைபடத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன MH370 மலேசியா விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அவுஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.
இதன் போர்து கடலின் ஆழ்ந்த பகுதிகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 1.20 லட்சம் சதுர கிலோ மீற்றர் தூரம் வரையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
எனினும், ஆய்வில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தேடுதல் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் கைவிடப்பட்டது.
எவ்வாறாயினும், தேடுதல் நடவடிக்கையின் போது கடலுக்குள் புதிய உலகம் புதைந்து இருப்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள் இது குறித்த வரைபடத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் கடலுக்கு அடியில் சுமார் 6 கிலோ மீட்டர் அகலம், 15 கிலோ மீட்டர் நீளத்தில் முகடுகளும், 5 கிலோ மீட்டர் அகலம், 1200 மீ்ட்டர் ஆழத்தில் பள்ளத்தாக்குகள் மற்றும் எரிமலைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலியா நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ஆய்வுத் தலைவர் ஸ்டூவர்ட் மின்ஷின்,
"கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் பகுதிகளைப் பற்றிய தகவல்கள் எதிர்காலத்தில் கடல் ஆராய்ச்சிக்கு பாரிய உதவியாக அமையும் என கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/world/01/152723

No comments:

Post a Comment