Wednesday, June 21, 2017

இரண்டாம் உலகப்போரில் காணாமல் போன கணவன்..! 80 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்த உருக்கமான தருணம்!!

லண்டனில் கென் ஹாரீஸ் மற்றும் மார்கரெட் இருவரும் 1937ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். ஹாரீஸ் இறைச்சி விற்பனை செய்து வந்தார். மார்கரெட் ஒரு டாக்டரிடம் செகரெட்டரியாக வேலை செய்தார். அவர்களின் அன்பின் பரிசாக ஹாலன் மற்றும் ஆன் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
ஹாரீசும்,மார்கரெட்டும் உண்மை காதலர்களாக வாழ்ந்தனர். ஒருவரை ஒருவர் இணை பிரியாத ஜோடிகளாக அன்போடு வாழ்ந்து வந்தனர். அப்போது இரண்டாம் உலகப்போர் வந்தது. இதில் ஹாரீஸ் இரண்டாம் உலகப்போரின் போது சவுத் வேல்ஸ் பார்டரில் போர் புரிய அனுப்பப்பட்டார். அங்கு அவர் இடுப்பு முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது வரை நீங்கள் படித்தது ஃபிளாஷ் பேக்.
இப்ப கரண்ட் நிகழ்வுக்கு வர்றோம்.
இந்நிலையில் தற்போது ஹாரீஸ் மற்றும் மார்கரெட்டின் பிள்ளைகளான ஹாலன் மற்றும் ஆன் இருவரும் பேசுவதை கேளுங்கள்… ‘எங்கள் அப்பா போருக்குச் சென்றவர் திரும்பவில்லை. அவர் இறந்துவிட்டதாகவே நாங்கள் நினைத்தோம். அப்பாவை நினைத்துக்கொண்டே அம்மா வாழ்ந்து வந்தார். எங்கள் அம்மா மார்கரெட் எங்களை வளர்த்தெடுத்தார்.
தற்போது எங்களுக்கும் 80 வயது ஆகிவிட்டது. அம்மாவுக்கு 99 வயதாகிவிட்டது. அம்மாவுக்கு முதுமையில் ஏற்படும் மறதி நோய் வந்துவிட்டது. அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தோம்.’ என்று பேசி முடித்தார்கள்.
இந்நிலையில் இரண்டாம் உலகப்போரில் இடுப்பு முறிந்த ஹாரீசுக்கு குணமாகி பவீஸ் பகுதியில் உள்ள லாங்கிநீடிர் மருத்துவமனையின் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தனது மனைவி மார்கரெட் இருப்பதை பார்த்துவிட்டு பரவசமாகிப்போனார். மனைவியும் அவரை அடையாளம் கண்டு கொண்டாராம். தற்போது இருவரும் பிடித்துக்கொண்ட கைகளை விடுவதே இல்லையாம்.
நீண்ட நாட்கள் பிரிந்து வாழ்ந்ததில் அவர்கள் வாழ்ந்த காலங்களை எண்ணி மகிழ்கிறார்கள். அவர்களின் உண்மை காதல் தான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்துள்ளது என்று ஹாரீஸ் மார்கரெட் தம்பதியின் 75 வயதான மருமகள் பாட் ஹாரீஸ் கூறினார்.
80 ஆண்டுகளுக்குப்பின்னர் சேர்ந்த அந்த மகிழ்ச்சியான தருணத்தை குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது பெற்றோருடனேயே ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதாக கூறினார்கள்.
இதில் ஹாரீஸ் கூறும்போது, எனது அன்பு மனைவியை மீண்டும் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. நான் கொடுத்து வைத்தவன் என்று மிகிழ்ந்தார்.

- See more at: http://www.manithan.com/news/20170620127831#sthash.aXP56aHf.dpuf

No comments:

Post a Comment