Sunday, April 30, 2017

லாட்டரி மூலம் பெற்றோர் பேரன் பேத்திமாரை கனடாவிற்கு கொண்டு வரும் முறை!


லாட்டரி மூலம் அவர்களது பெற்றோர் மற்றும் பேரன் பேத்திமார்களை கனடாவிற்குள் கொண்டு வருவதற்கான கனடாவின் முதலாவது குடிவரவு லாட்டரி முறைக்கு 95,000ற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றினர் என அறியப்படுகின்றது. 10,000 இடங்களே உள்ள இந்த முறைக்கு பங்கு பற்றியவர்களின் தொகையோ அதிகம்.10ற்கு ஒன்று விகிதமான இடங்களே இதன் பிரகாரமாக உள்ளதென தெரிகின்றது.
கனடா குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தின் இப்புதிய லாட்டரி செயல்முறை முன்னய முதல் வருகை முதல் சேவை திட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டதாகும்.
ஜனவரி 3-ற்கும் பிப்ரவரி 2-ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த லாட்டரியில் பங்கு பற்ற ஸ்பொன்சர்கள் வலய-அடிப்படையிலான படிமங்களை நிரப்பலாம் என IRCC கூறுகின்றது.
முதல் தடவையாக இந்த வருடம் இப்புதிய செயல் முறை நடைமுறைக்கு வருகின்றது. இதனால் அடுத்து வரும் வருடங்களில் மாற்றங்கள் தேவையா என கண்டறிவதற்காக கண்காணிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இணையத்தளத்தில நிரப்ப படும் படிமங்களில் தோராயமாக 10,000 ஸ்பொன்சர்களை IRCC தெரிவு செய்து அவர்களை விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்குமாறு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும்.
தெரிவு செய்யப்படாதவர்களிற்கு அவர்களின் முடிவுகளை திணைக்களம் தெரியப்படுத்தும்.
கடந்த காலங்களில் குடும்ப மறு இணைதல் திட்டம் பாரிய பின்னடைவுகளால் தொல்லையுற்றிருந்தது. 2011 பின்னடைவு எண்ணிக்கை 167,007 ஆக இருந்துள்ளது.இந்த எண்ணிக்கை 2016-ல் 40,511ஆக குறைக்கப்பட்டது.
கடந்த வருடம் பெற்றோர் மற்றும் பேரன் பேத்திமார்களின் ஸ்பொன்சர்சிப்பை 5,000லிருந்து 10,000 ஆக இரட்டிப்பாக்கியது.
கனடிய குடியுரிமையாளர்கள் அல்லத நிரந்தர வதிவிடமையாளர்களின் பெற்றோர்கள் மற்றும் பேரன் பேத்திமார்கள் ஒரு சுப்பர் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.ஒரு பத்தாண்டு பல ஆண்டு-நுழைவு விசா ஆறு மாதங்கள் வரை பல வருகைகளிற்கு அனுமதி அளிக்கும்.
http://www.tamilwin.com/canada/01/144163?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment