Monday, August 3, 2015

தமிழீழம் கைகூடிவிட்டால்….. புலிகளின் தலைவர் பதில்…!

தமிழீழம் கைகூடிவிட்டால்….. புலிகளின் தலைவர் பதில்…!

ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையும் என பிரபாகரனிடம் இந்திய ஊடகம் ஒன்று 1986 இல் கேள்வி கேட்டபோது
அதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் பதிலளிக்கையில்
தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப்பெறும்.
சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகின்றேன்.
இதில் மனித சுததிரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு.
எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புக்கள்  கிடைக்கின்ற ஒரு சுதந்திர சமூகமாக  தமிழீழம் அமையும்.
இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக்கொள்கையைக் கெளாரவிக்கும் தமிழீழ மண்ணுக்கேற்ற கோட்பாட்டிலேயே கடைப்பிடிப்போம் என்பதை பிரபாகரன் திட்டவட்டமாக தெளிவாக்கி இருந்தார்.
pirabaha
- See more at: http://www.asrilanka.com/2015/08/03/29579#sthash.rqVGNFXU.dpuf

No comments:

Post a Comment