Monday, June 22, 2015

லண்டன் "லைசென்ஸா" நீங்கள் கார் ஓட்டுபவர் என்றால் அறியவேண்டிய புதுச் சட்டம் !

லண்டன் கார் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரு விடையத்தை கவனிக்கவேண்டும். கடந்த வருடம் தொடக்கம் சில சட்டம் மாறியுள்ளது. முக்கியமாக மோட்டர் வேயில்(நெடுஞ்சாலையில்) செல்லும் போது நீங்கள் தொடர்ந்தும் முதலாவது (வேகமாகச் செல்லும்) லைனில் பணிக்க முடியாது. தொடர்சியாக நீங்கள் முதலாவது லைனில் பயணித்தால் அதற்கு அபராதம் கட்ட வேண்டி வரும். இதேவேளை 2 வது லைனும் அப்படி தான். முதலாவது லைன் காலியாக இருந்தால் நீங்கள் அதில் தான் பயணிக்கவேண்டும். மோட்டர் வேயின் வேகக் கட்டுப்பாடும் 70 மைல் ஆகும். நீங்கள் அதற்கும் குறைவாக வாகனத்தை ஓட்டவேண்டும் என்றால் நிச்சயம் முதலாவது லைனில் தான் செல்லவேண்டும்.
2 வது அல்லது 3 வது லைனில் நீண்ட நேரம் ஓடுவது. இல்லையென்றால் வேகத்தை குறைத்து ஓடுவது என்பது சட்டப்படி குற்றமாகும். இதன் காரணமாக தற்போது முதன் முறையாக பிரித்தானியாவில் ஒரு வாகன ஓட்டுனருக்கு 1,000 பவுன்டுகள் தண்டப் பணம் கட்டவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்து , இச்சட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான் என்கிறார்கள்.

No comments:

Post a Comment