Sunday, May 3, 2015

மையூரன் மரணதண்டனை திரொலி: ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இந்தோனேஷிய அதிபரின் புகைப்படம் நீக்கம் !

இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான் என்ற 2 ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் உள்பட 8 பேரின் மரண தண்டனையை ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த புதன்கிழமை இந்தோனேஷிய அரசு நிறைவேற்றியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் இருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் தேசிய புகைப்பட அருங்காட்சியகம் உள்ளது. இதில் உள்நாடு மற்றும் சர்வதேச தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவின் புகைப்படமும் இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், நாடு முழுவதும் இந்தோனேஷிய எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதனால் இந்த புகைப்படத்தை அருங்காட்சியக நிர்வாகம் அகற்றி விட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற கலைப்பொருட்கள் மற்றும் அங்கு வரும் பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக இந்த புகைப்படத்தை எடுத்து விட்டதாக அருங்காட்சியக இயக்குனர் அங்குஸ் ட்ரம்பிள் கூறினார்.
http://athirvu.com/newsdetail/3111.html

No comments:

Post a Comment