Thursday, April 16, 2015

சவப்பெட்டியை திறந்து நான் எங்கேயிருக்கிறேன் எனக் கேட்ட சடலம் !

சவப்­பெட்­டி­யின் மூடி திடீ­ரென திறந்து அதற்குள் இருந்த பெண் , “நான் எங்­கி­ருக்­கிறேன்?" என முன­கி­ய­வாறு வினவி நல்­ல­டக்க செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்குப் பொறுப்­பான பணி­யா­ளரை அதிர்ச்­சியில் ஆழ்த்­திய சம்­பவம் ஜேர்­ம­னியில் திங்­கட்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது.
ஜெல்­சென் ­கிர்சென் நகரில் முதி­யோர்­க­ளுக்­கான இல்­லத்தில் தங்­கி­யி­ருந்த மேற்­படி 92 வய­தான பெண், உடலில் எது­வித அசைவும் இன்றி காணப்­ப­டு­வதை அவ­தா­னித்த அவ­ரது பராம­ரிப்­பாளர் மருத்­து­வர்­களை வர­வ­ழைத்­துள்ளார்.அவரை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவர் இறந்­து­விட்­ட­தாக அறிவித்தி­ருந்­தனர்.தொடர்ந்து அந்தப் பெண் நல்­ல­டக்க செயற்­பா­டு­க­ளுக்­காக மன்ஸ்­டர்மான் மலர் சாலைக்கு கொண்டு வரப்­பட்டார்.இதன் போது உயி­ருடன் சவப்­பெட்­டிக்குள் வைக்­கப்­பட்ட குறிப்­பிட்ட பெண், சவப்­பெட்­டியின் மூடியைத் திறந்து மேற்­கண்­ட­வாறு வின­வி­யுள்ளார்.
இத­னை­ய­டுத்து நல்­ல­டக்க செயற்­பா­டு­களை மேற்கொள்வதற்குப் பொறுப்­பான பணி­யாளர் உட­ன­டி­யாக அம்­புலன்ஸ் வண்­டிக்கு அழைப்பு விடுக்­கவும் அந்தப் பெண் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார்.தொடர்ந்து அந்தப் பெண் உயி­ருடன் இருப்­பது தொடர்பில் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.
இது தொடர்பில் மலர்ச்­சாலை பணி­யாளர் விப­ரிக்­கையில், சவப்­பெட்டி இலே­சாக திறந்த போது தனது கண்­களை தன்னா­லேயே நம்­ப­மு­டி­ய­வில்லை எனவும் அந்தப் பெட்டியினுள் இருந்த பெண் கண்கள் விழித்­தி­ருக்க தன்னை பார்த்து வினவிய போது தனக்கு அச்சத்தில் மயக்கம் வருவது போன்று இருந்தாகவும் கூறினார்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment