Tuesday, April 28, 2015

இந்தோனேசியாவுடன் உறவுகளை முறுத்துக்கொள்ளும் அவுஸ்திரேலிய அரசு !

மயூரனின் தங்கை கதறி அழும் காட்சி உலகை அதிரவைத்துள்ளது: வீடிடோ இணைப்பு !



தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ஈழத் தமிழரான மையூரனின் தங்கை, இன்றைய தினம் மாலை தனது அண்ணாவை சிறையில் சந்தித்துள்ளார். தங்கை மற்றும் சகோதரன் ஆகியோர் இணைந்து இறுதியாக இந்தோனேசிய மக்களுக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்தார்கள். எனது அண்ணாவைக் கொல்வதால் உலகில் போதைப் பொருள் கடத்தல் ஒன்றும் நின்றுவிடப்போவது இல்லை. இன்று இல்லையென்றால் நாளை , இல்லையென்றால் அடுத்த மாதம் எவராவது போதைப் பொருளை கடத்திக்கொண்டு தான் இருப்பார்கள். எனவே இக்கொலையை நிறுத்துங்கள் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதுபோக எனது கையால் என் அண்ணாவை அடக்கம் செய்யும்படி செய்யவேண்டாம் என்று தங்கை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அது எதனையும் இந்தோனேசிய அரசு கேட்டபாடாக இல்லை. இச்செய்தி தற்போது அவுஸ்திரேலியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. அவுஸ்திரேலியர்கள் பலர் , தாம் இனி இந்தோனேசியாவுக்கு விடுமுறைக்கு செல்லமாட்டோம் என்று சபதம் எடுத்து , இணையத்தளங்களில் எழுதி வருகிறார்கள். இந்த மரணதண்டனையை நிறுத்துமாறு இறுதியாக ஐரோப்பிய ஒன்றியமும் , கோரிக்கை விடுத்துள்ளது. அதனையும் ஜனாதிபதி நிராகரித்துவிட்டார்.


இந்தோனேசியாவுடன் உறவுகளை முறுத்துக்கொள்ளும் அவுஸ்திரேலிய அரசு !


ஈழத் தமிழர் உட்பட  அவுஸ்திரேலியர்களை ,இந்தோனேசிய அரசு சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இச்சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது என்று அன் நாட்டின் விசேட செய்தி நிறுவனமான ஜக்கராத் போஸ்ட் தெரிவித்துள்ளது. அதுபோக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் , கடும்தொணியில் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். நடைபெற்றது உண்மை என்று தெரியவரும் நிலையில் தமது நாட்டு தூதுவரை திருப்பி அழைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று அவர் பகிரங்கமாக கூறியுள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தோனேசிய தூதுவராலயத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க இன்று நடந்த இக்கொலைகளில் பிரான்ஸ் நாட்டவரும் கொல்லப்பட்டுள்ளார். இதனால் பிரான்ஸ் அரசாங்கம் கடும் ஆத்திரமடைந்துள்ளது. இந்தோனேசியாவில் இதற்கு முன்னரும் பல மரணதண்டனைகள் இதுபோல நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த தண்டனையை நிறுத்துமாறு உலகமே கோரிக்கை விடுத்திருந்தது. குற்றவாளிகள் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளார்கள். அதுவே ஆயுள் தண்டனைக்கு நிகரானது. அதுபோக அவர்கள் அனைவரும் திருந்தி வாழ ஆரம்பித்தும் விட்டார்கள். இன் நிலையில் அவர்களை மன்னிப்பதே நல்லது என்று பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்தார்கள்.
ஆனால் இறுதிவரை தான் நினைத்தது தான் சட்டம் என்று , இந்தோனேசிய ஜனாதிபதி நடந்துள்ளது பல நாடுகளை அதிர்சியடைய வைத்துள்ளதோடு , ஆத்திரமூட்டியும் உள்ளது. இனி பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று , அவுஸ்திரேலியாவும் பிரான்சும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள். இதுவரை இந்தோனேசிய அரசு மையூரன் மற்றும் அன்று சான் இறந்துவிட்டார்கள் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம். ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/3061.html

No comments:

Post a Comment