Thursday, March 19, 2015

லண்டனில் நாளை காலை இரவாக மாறலாம்: சூரியன் 98 % சதவிகிதம் மறையும் !

10 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வாறு ஒரு அதிசயம் நடைபெறும். அதாவது நாளை காலை 9.30 மணிக்கு(லண்டன் நேரப்படி) சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய 3 கோள்களும் , ஒரு நேர் கோட்டில் வருகிறது. இதனால் சூரியனின் ஒளி 98 சதவீதம் மறைக்கப்படும். இதன் காரணமாக நாளை காலை 9.30 மணிக்கு , இரவு போல மாறும். இதேவேளை சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளார்கள். பிரித்தானியாவில் சில இடங்களில் மின்சார தடை ஏற்படலாம் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதற்கு தாம் தயாராக இருப்பதாக குறித்த கம்பெனிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதுபோக பாடசாலையில் பிள்ளைகள் இருக்கும் நேரம் என்பதனால் அவர்களை சூடிய கிரகணத்தை பார்க்க சில பள்ளிக்கூடங்கள் அனுமதித்துள்ளார்கள். ஆனால் அதனை வெறும் கண்ணால் பார்த்தல் கண்பார்வை கெட்டுப்போகும் என்று சிலர் இன்னும் கூறிவருகிறார்கள். அது உண்மையில்லை. சூரிய கிரகணத்தை நாம் பார்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். எனவே நாளை காலை 9.30 மணி ஒரு விசேடமான பொழுதாக இருக்கப்போகிறது. அதிசயம் மிக்க நாளாகவும் அது அமையும். இதுபோன்ற அடுத்த சூரிய கிரகணத்தைப் பார்க முடியுமோ தெரியவில்லை. அதனால் இதனைப் பார்க மறக்கவேண்டாம்.

No comments:

Post a Comment