Monday, February 2, 2015

லண்டனில் அனைத்து முக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கும் டீசர் துப்பாக்கி !

லண்டனில் அதிகரித்துள்ள பெண்கள் கொலை: கழுத்தில் காயங்களுடன் உடல் மீட்ப்பு !

[ Feb 02, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 11535 ]

தலை மற்றும் கழுத்து கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணின் உடல் போலேயிலுள்ள ஹாம் கொம்மன் பகுதியின் ஏரியொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருவதோடு, இறந்தவர் 25 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். கண்டெடுக்கப்பட்ட உடல் அண்மையில் காணாமல் போனதாகக் கூறப்டும் சமன்தா ஹென்டர்சனின் உடல் என நம்பப்படுகின்றது.
கடந்த ஜனவரி 21ஆம் திகதி சமன்தா, Corfe Castle பாலர் பாடசாலையிலிருந்து வெளியேரியமையைத் தொடர்ந்து அவர் காணாமல் போயிருந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக பிரித்தானியாவில் கொலைச் சம்பவங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அதிர்கரித்துச் செல்கிறது.

லண்டனில் அனைத்து முக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கும் டீசர் துப்பாக்கி !

[ Feb 02, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 13315 ]

தற்போது தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் முக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கும் டீசர் துப்பாக்கிகளை வழக்கவுள்ளதாக இங்கிலாந்து பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரை தாக்க முற்படும் நபர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீருடையணிந்த முக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு டீசர் துப்பாக்கி பயிற்சி வழங்குவதற்கான பிரேரணைக்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சில அதிகாரிகள் இதனை செயற்படுத்தாமல் இருப்பதனை விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம் என்னவென்றால் இந்த துப்பாகியால் சுட்டால் அதில் இருந்து வெளியாகும் சிறிய துண்டு ஒரு வயர் கம்பியோடு பிணைப்பில் இருக்கும். அதனூடாக சுமார் 40,000 ஆயிரம் வால்ட் மின்சாரம் பாயும். பொதுவாக எந்த ஒரு வயதான நபர் அல்லது , பல மில்லாத நபர்கள் இதனை தாங்கவே முடியாது. இதனால் அவர்கள் இதயம் பாதிக்கப்பட்டு அவர்கள் உடனே இறக்கும் நிலை தோன்றலாம். இதனை விட சாதாரண துப்பாக்கியால் காலில் சுட்டால் கூட, அன் நபர் தப்பிக்க 80 சதவீதமான வாய்ப்புகள் உள்ளது.
டீசர் துப்பாக்கி என்பது ஒரு ஆட்கொள்ளி துப்பாக்கியாகும். ஆனால் நவீன உலகில் அதனை ஒரு நல்ல ஆயுதம் என்று கூறுகிறார்கள். டீசர் துப்பாக்கியால் சுடப்பட்டு பலர் இறந்துபோய் உள்ளார்கள். இன் நிலையில் பிரித்தானிய பொலிசாருக்கு இதனை வழங்குவது என்பது யோசிக்க வேண்டிய விடையமாக உள்ளது.

No comments:

Post a Comment