Monday, February 2, 2015

தேன் நிலவுக்கு அழைத்துச் சென்று மனைவி கொலைசெய்யப்பட்டார்: லண்டன் கணவரின் திடுக்கிடும் திட்டம் !


லண்டன் தொழில் அதிபரான திவானி என்னும் இந்திய வம்சாவளி நபர், அனி என்னும் பெண்ணை திருமணம் முடித்தார். தேன் நிலவுக்குச் செல்வதாக கூறி அவரை ஆபிரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அவர் செட்டப் செய்ததுபோல இவர்கள் காரில் ஒன்றாக பயணித்தவேளை கொள்ளையர்கள் போல வந்த சிலர் அனியை கொலைசெய்தார்கள். பின்னர் இவர்கள் இருவரையும் பொலிசார் கைதுசெய்து விசாரித்தவேளை திவானி தான் கொலைசெய்ய காசை தந்ததாக அவர்கள் தெரிவித்தார்கள். இச்செய்தியை நாம் ஏற்கனவே அதிர்வு இணையத்தில் பிரசுரித்து இருந்தோம். இருப்பினும் திவானி லண்டன் வந்துவிட்டார். பின்னர் ஆபிரிக்க பொலிசார் அவரை நாடுகடத்த வேண்டும் என்று பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்தார்கள். நீண்ட மாதம் நடைபெற்ற போராட்டத்தின் இறுதியில் திவானி ஆபிரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
பின்னர் ஆபிரிக்காவில் நடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலையாளிகள் திவானியை அடையாளம் காட்ட தவறிவிட்டார்கள். இதனால் திவானி தப்பித்துவிட்டார். இது கூட திவானியின் பண பலம் தான் என்கிறார்கள் பெண் வீட்டு காரர்கள். அங்கிருந்து திவானி மீண்டும் லண்டன் வந்துவிட்டார். இன் நிலையில் லண்டனில் அவர் பெரும் நெருக்குதலை எதிர்நோக்கியுள்ளார். மக்கள் தீர்பாயத்தில் கேள்விகள் கேட்க்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பிரித்தானியா வாழ் மக்களே திவானியிடம் கேள்விகளை கேட்க்கவுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கு அவர் பதில் கூறவேண்டிய கடைப்பாட்டில் உள்ளார். ஏன் என்றால் செய்திகளை படித்து வரும் பலர் , திவானி சட்டத்தில் இருந்து தப்பித்து விட்டதாக கருதுகிறார்கள். இதனால் மக்கள் ஒன்றுகூடி கேள்விகளை கேட்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

No comments:

Post a Comment