இவளிற்கு வயது நான்கு ஆக இருக்கலாம் ஆனால் கல்கரி ஓவியரான கொசேட் ஸ்வாட்  ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான தனது ஒவியங்களை தர்ம ஸ்தாபனங்களிற்காக விற்றுள்ளாள்.
யோசித்துப்பார்க்கையில் இது ஒரு சாதனைதான்.
கடந்த டிசம்பரில் தனக்க நான்கு வயதானது என கூறினாள்.
கொசெட் மொத்தமாக 60-ஓவியங்களை விற்று 4,000 டொலர்களிற்கும் மேலான தொகையை தேவையானவர்களிற்கு உதவுவதற்காக லாப-நோக்கற்ற நிறுவனங்களான World Vision மற்றும் Charity Water.ஊடாக கொடுத்துள்ளாள். இவளது நோக்கத்தை விபரித்து இவளது பெற்றோர் ஒரு இணையத்தளம் மூலம் ஓவியங்களை விற்றனர்.
உலகம் பூராகவும் தேவையான குடும்பங்ககளிற்கு உதவுவதற்கான மதிப்புமிக்க பொருட்களை வாங்குவதற்கு ஓவியங்களில் இருந்து பெறப்பட்ட பணம் செலவிடப்பட்டதென கொசட்டின் தாய் கிறிஸ்டி-ஆன் ஸ்வாட் கூறினார்.
ஒரு மாடு, ஒரு செம்மறி ஆடு, ஆடுகள், கோழிகள், பன்றிகள், சேவல்கள் மற்றும் ஒரு கூடார தங்குமிடம் கூட வாங்க கூடிய அளிவிற்கு திரட்டியதாக தெரிவித்தார்.
கொசெட்டின் ஓவியங்கள் வாங்குபவர்களை ஈர்ப்பதாக மட்டும் இருக்கவில்லை அவை பாராட்டுக்களையும் கூட ஈர்ப்பவைகளாக இருந்தன.
art1
artart2