Friday, January 23, 2015

நாயின் காது மடலில் ஜீசஸ் உருவம்! சந்தோஷத்தில் துள்ளும் உரிமையாளர்

பிரித்தானியாவில் நாயின் காதில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தெரிவது அதன் உரிமையாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் சவுத் வேல்ஸ்(South Wales) மாநிலத்தில் உள்ள ஸ்வான்சீ(Swansea) பகுதியில் ரெய்ச்செல் ஈவான்ஸ்- ஜேம்ஸ் வில்லியம்ஸ்(Rachel Evans Age-25-James Williams Age-28) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்வான்சீ பகுதியில் மற்றொரு வீட்டுக்கு தனது சகோதரி லூயிஸ் இவானுடன்(Lewis Evann Age-24) ரெய்ச்செல் குடியேறியுள்ளார்.
அப்போது தான் ஆசையாக வளர்த்து டேவ்(Dave) உட்பட 5 செல்ல நாய்களை அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டேவ் உட்பட 5 நாய்களையும் ரெய்ச்செல் குளிப்பாட்டி விதவிதமாக புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது, டேவ்வின் காது மடலில் இருக்கும் தசைகள் விரிந்து இயேசுவின் உருவம் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த இயேசு உருவத்தை வெவ்வேறு விதமாக படமெடுத்து, தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இந்த வீட்டுக்கு வந்த பிறகு எனது செல்ல நாயின் காதில் இயேசுவின் உருவம் தெரிந்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றும், இனி இந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் எனவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment