Thursday, December 25, 2014

ISIS சின்ஜார் மலையில் விட்டதை "பைஜி" நகரில் பிடித்ததாமே: உண்மையில் நடந்தது என்ன ?

லண்டன் 2 பவுன்ஸ் நாணயத்தை பக்கா போலியாக செய்ய சீன திருடர்கள் கற்றுக்கொண்டுள்ளார்கள் !

[ Dec 25, 2014 06:29:30 AM | வாசித்தோர் : 4270 ]
பிரித்தானியா புதிதாக 2 பவுன்ஸ் நாணயத்தை சில வருடங்களுக்கு முன்னர் பிளக்கத்தில் விட்டது. மிகவும் தனித்துவம் வாய்ந்த வகையில் இந்த நாணயம் இருக்கிறது. அத்தோடு இந்த நாணயத்தில் காணப்படும் வேலைப்பாடு அதிகம் என்பதனால் அதனை போலியாக செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் அதனையும் மீறி சீனவில் உள்ள கிருமினல்கள் சிலர் இந்த நாணயத்தை மிகவும் தத்துரூபமாக செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக இந்த நாணயத்தின் எடை, நிறம் மற்றும் அதில் உள்ள வடிவம் என்பனவற்றை இவர்கள் ஒரிஜினல் நாணயத்தில் உள்ளதுபோலவே, செய்துள்ளார்கள்.
இதனை சீனாவில் இருந்து எடுத்துவந்து இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் பாவிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பாவில் இருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட 2 பவுன் நாணயங்கள் பல போலியாக உள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிரித்தானிய ஸ்காட்லன் யாட் பொலிசார் நடத்திய ரகசிய விசாரணைகளில் இருந்து, இந்த நாணயங்கள் சீனாவில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், ஐரோப்பிய நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் பண மாற்று முகவர் நிலையங்கள் கூட இது போலி நாணயம் என்பதனை கண்டுபிடிக்க தவறியுள்ளது.
அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தியாக இந்த போலி நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். போலியான பொருட்களை தயாரித்து அதனை கள்ளச் சந்தையில் பிளக்கத்தில் விடும் நாடுகளின் வரிசையில் சீனாவும் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஆப்பிளின் ஐபோன்களை கூட இவர்கள் போலியாக தயாரித்து வருகிறார்கள். அதனை எடுத்து வந்து லண்டனில்கூட விற்கிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1715.html

றோட்டில் காசு மழை: 1.2 மில்லியன் பவுன்சுகளை கொண்டு சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் !

[ Dec 25, 2014 06:47:22 AM | வாசித்தோர் : 8580 ]
சுமார் 1.2 மில்லியன் (பவுன்சுகள் பெறுமதியான) ஹாங் காங் பணத்தை கொண்டுசென்ற வாகனம் வீதியில் விபத்தில் சிக்கியதால் நடந்த விபரீத்த்தை பாருங்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெருந்தொகையான பணத்தை எடுத்துச் சென்ற வாகனம் ஒன்று ஹாங் காங் வீதியில் ஒன்றில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதில் இருந்த பெருந்தொகையான பணம் அப்படியே வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்தப் பணம் அப்படியே றோட்டில் பரவிக் கிடக்க, பலர் தமது வாகனங்களை அப்படியே பார்க் செய்துவிட்டு காசைப் பொறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கிடைத்தவரை லாபம் என்று பொலிசார் வருமுன்னரே பணத்தை எடுத்துகொண்டு பலர் சென்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. நடு றோட்டில் பலர் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க ஆரம்பித்ததால், அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனம் ஏன் இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை பாதுகாப்பு இல்லாமல் கொண்டுசென்றது என்று தெரியவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1716.html

ISIS சின்ஜார் மலையில் விட்டதை "பைஜி" நகரில் பிடித்ததாமே: உண்மையில் நடந்தது என்ன ?

[ Dec 25, 2014 06:58:17 AM | வாசித்தோர் : 7950 ]
சிரியாவிலும், ஈராக்கிலும் ராணுவ ரீதியாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த ISIS இயக்கம், சிரியா ஈராக் எல்லையருகே உள்ள சின்ஜார் மலைப் பகுதியில் நடைபெற்ற யுத்தத்தில் சுமார் 300 பேரை இழந்ததுடன், அந்த மலைப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளை கைவிட்டு பின்வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. சின்ஜார் மலையின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளதாக ஈராக்கின் குர்திஷ் பெஷ்மெகா ராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் அந்த மலைப் பகுதியில் ISIS இயக்கத்திடம் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்களையும் மீட்டிருக்கிறார்கள்.
இந்த மலைப்பகுதியில் வசிப்பவர்கள், ஷியா பிரிவில், யாஸ்டி என்ற உப பிரிவைச் சேர்ந்த மக்கள். 4 மாதங்களுக்கு முன் இந்த மலைப்பகுதியை ISIS இயக்கம் கைப்பற்றியபோது, அங்கிருந்த பெண்களை பலவந்தமாக பிடித்துச் சென்றிருந்தனர். அவர்களை தமது போராளிகளுக்கு மனைவிகள் ஆக்கியிருந்தனர். ஈராக்கிய, குர்திஷ், மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ஆபரேஷனால்தான், இந்த மலைப் பகுதியில் இருந்து ISIS இயக்கத்தினர் விரட்டப்பட்டுள்ளார்கள். இருப்பினும் இந்த மலைப் பகுதியின் இன்னும் சில பகுதிகள் ISIS இயக்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
இந்த ராணுவ வெற்றி பற்றிய தகவலை வெளியிட்ட ஈராக்கிய ராணுவம், “சின்ஜார் மலைப் பகுதியில் இருந்து ISIS இயக்கத்தினர் விரட்டப்பட்டுள்ளார்கள்” என்றே கூறியுள்ளார்களே தவிர, இந்த மலையடிவாரத்தில் உள்ள சின்ஜார் நகரம் பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை என்பதை கவனியுங்கள். இதன் காரணம் என்னவென்றால், அந்த நகரம் இன்னமும் ISIS இயக்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்த நகரம் மீது தரைத் தாக்குதல் மட்டுமே நடத்தலாம் என்ற நிலை உள்ளது. காரணம், அமெரிக்கா இங்கு விமானத் தாக்குதலை நடத்தினால், அங்கு ISIS இயக்கத்தினர் பிடித்து வைத்துள்ள ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படும் அபாயம் உள்ளது. சின்ஜார் மலைப் பகுதியை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின், சின்ஜார் நகரம் மீது குர்திஷ் ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு சில நாட்கள், அல்லது வாரங்கள் அவகாசம் எடுக்கலாம்.
இதற்கிடையே மற்றொரு உறுதிப்படுத்தப்படாத தகவலும், ராணுவ வட்டாரங்களில் அடிபடுகிறது. அது என்னவென்றால், சின்ஜார் மலைப் பகுதியில் ISIS இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்துவதில் ஈராக்கிய, குர்திஷ், மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் பிசியாக இருக்கையில், ISIS இயக்கத்தினர் ஓசைப்படாமல் "பைஜி" நகரத்தை ஈராக்கிய ராணுவத்திடம் இருந்து கைப்பற்றி விட்டனர் என்கிறார்கள். ஈராக்கின் பிரதான எண்ணை சுத்திகரிப்பு மையம் அமைந்திருப்பது, பைஜி நகரத்தில்தான். இந்த நகரத்தை ISIS இயக்கத்தினரிடம் இருந்து ஈராக்கிய ராணுவம் மீட்டு இருந்தது. தற்போது, நகரத்தின் மீது தாக்குதல் நடத்திய ISIS இயக்கத்தினர், ஈராக்கிய ராணுவத்தை அங்கிருந்து விரட்டிவிட்டு, நகரத்தை கைப்பற்றி விட்டதாக ராணுவ வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இது உண்மையாக இருந்தால், ஈராக்கிய, குர்திஷ், மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ஆபரேஷன் சின்ஜாரில் ஜெயித்து, பைஜியில் கோட்டை விட்டுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.
http://www.athirvu.com/newsdetail/1717.html

No comments:

Post a Comment