Saturday, December 20, 2014

பள்ளி குழந்தைகளை படுகொலை செய்த தலிபான் தலைவன் பலி (வீடியோ இணைப்பு)!

பெஷாவர் குழந்தைகள் படுகொலைக்கு காரணமாக இருந்த தெரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பெறுப்பான தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுல்லா (Maulana Fazluahh), பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இச்செய்தியை தனது பேஸ்புக் பக்கத்திலும் தெரிவித்துள்ளது.
http://newsonews.com/view.php?2c4M0Sqa22cdLBPdbe2ocO7d0c2066AYe0d2A4MCe2beavlAA424eZnnB340dcO8MQd3

குழந்தைகளை கொன்று குவித்தது சரியே: தாக்குதலை நியாயப்படுத்திய தலிபான் தலைவன் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 06:34.03 மு.ப GMT ]
பெஷாவர் இராணுவ பள்ளி தாக்குதலை நியாயப்படுத்திய தலிபான்கள் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தலிபான்கள் தரப்பில் தாக்குதல் குறித்த புதிய வீடியோ ஒன்றை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் மன்சூர் (Umar Mansoor) வெளியிட்டுள்ளான்.
இந்த காணொளியில் அவன் பேசியதாவது, பழங்குடி பகுதிகளில் அப்பாவி இஸ்லாமியர்களை கொலை செய்த இராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் இங்குதான் படிகின்றன.
இராணுவத்தினர், நீதிக்கு புறம்பாக போராளிகளின் உறவினர்களையும் கொலைசெய்தனர். எனவே அவர்களின் நடவடிக்கைக்கு பதிலடியாக பெஷாவர் இராணுவ பள்ளி தாக்குதல் நடைபெற்றது என பேசியுள்ளான்.
http://newsonews.com/view.php?2c4ZnnBn02c0c66AY4e4240M0Sq040dcd7OcOe0d2dAAlvla22c8O8MQe2ebdA4MCeaeb2bdLBPBd3

No comments:

Post a Comment