Saturday, November 8, 2014

“கட்டியணைத்து போராட்டம்” மாணவர்கள் சஸ்பெண்ட்

கேரளாவில் கட்டியணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
கேரளாவின் மாணவர் அமைப்புகளால் தொடங்கப்பட்ட 'காதல் முத்த' போராட்டத்தை தொடர்ந்து சமூகத்தில் கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் இயங்கும் இயக்கங்களுக்கு எதிராக 'கட்டி அணைப்பு' போராட்டம் எர்ணாகுளம் மகாராஜ கல்லூரி மாணவர்களால் நேற்று கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது.
இது கல்லூரி விதிகளை மீறியது நிர்வாகம் கண்டித்தும், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
எனவே இவர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்ததுடன், இதுகுறித்து கல்லூரி முதல்வர் டி.வி.பிரான்ஸி கூறுகையில், போராட்டம் நடத்திய 10 மாணவர்கள் அடுத்த 10 நாட்களுக்கு கல்லூரி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இப்போராட்டம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கவில்லை, இதற்கும் முத்த போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கல்லூரியின் எதிர்ப்பையும் மீறி வளாகத்துக்குள்ளேயே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment