ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கரன்ஸா (Carranza Age-34) என்ற பெண்மணி ஐஸ்கீரிம் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு தனது கணவர் மற்றும் காதலனை கடந்த 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இவரது கணவர் விவாகரத்து பெற்ற பின்னும் வீட்டை விட்டு செல்ல மறுத்ததால், அவர் கணனியில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, கரன்ஸா அவரது தலையில் துப்பாகியால் சுட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து கடந்த இரண்டு வருடங்கள் முன்பு, தனது காதலன் குடித்து விட்டு தூங்கி கொண்டிருந்தபோது, அவரையும் கரன்ஸா துப்பாகியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இதன்பின் இந்த இரண்டு சடலங்களையும் தனது ஐஸ்கீரிம் கடையில் புதைத்துவிட்டு, மூன்றாவதாக நபர் ஒருவருடன் உல்லாசமாக இருந்து கர்ப்பமடைந்துள்ளார்.
ஆனால் இந்த சடலங்களை இவரது கடையின் பணியாள் ஒருவன் பார்த்ததால், அவன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளான்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் கரன்ஸாவை கைது செய்ததுடன், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி கரன்ஸாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே கரன்ஸா தான் எவ்வாறு கொலை செய்தேன் என்ற கதையை மை 2 லிவ்ஸ் (My 2 lives) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment