ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டவுடன் எதிர்க்கட்சிக் கூட்டணி சிதறிவிடும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டம், மித்தெனிய நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் வாழும் அனைத்து இன, மத மற்றும் குலம், கோத்திரம், பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் ஒரே பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த மாத்திரமே. ஆளுங்கட்சியின் பொது வேட்பாளரும் அவர்தான்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அவரது வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது வேட்பாளர் யார் என்பது தெரிந்தவுடன் அந்தக் கூட்டணி சிதறிவிடும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தோல்வியில் இருந்து பாதுகாத்து, அவரது கட்சித் தலைமைத்துவத்தை பாதுகாக்கவே இந்த பொது வேட்பாளர் நாடகம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அமைச்சர் அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjoz.html

No comments:
Post a Comment