சற்று நேரத்திற்கு முன்னதாக லண்டன் பாராளுமன்ற வளாகத்தினுள் உள்ள, "Portcullis House" என்னும் கட்டத்தினுள் வெடிகுண்டு பார்சல் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சோதனை நடத்திய பொலிசார் அங்கே சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று இருப்பதை அவதானித்துள்ளார்கள். இதனால் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இருந்த பலரை அவர்கள் உடனடியாக வெளியேற்றியுள்ளார்கள். அங்கே குண்டை செயலிழக்கச் செய்யும் படையினர் வரவளைக்கப்பட்டுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
குறிப்பிட்ட பார்சல்லில் எந்தக் குண்டும் இல்லை என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் றொயிட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment