Friday, November 21, 2014

அமெரிக்க தூதுவருக்கு ஐ. நாவில் புதிய பதவி!

சந்திரிக்காவின் ஊடக மாநாட்டுக்கு அரசின் அச்சுறுத்தல்! நாளை வரை பிற்போடப்பட்டது
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 10:34.39 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்தின, நவீன் திசாநாயக, பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ் . குணவர்த்தன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஜகத் புஸ்பகுமார, டீ. பி ரத்நாயக்க போன்ற மேலும் சில முக்கிய அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அழைப்பு தற்போது ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இதற்கான இடம் இன்னும் குறிக்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அலுவலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
சந்திரிக்காவின் ஊடக மாநாட்டுக்கு அரசின் அச்சுறுத்தல்! நாளை வரை பிற்போடப்பட்டது
சந்திரிக்கா தலைமையில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவிருந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அமைச்சர் மைத்திரிபாலவுடன் விலகி வந்த குழுவினருக்கு மேலதிகமாக இன்று மாலை இன்னொரு குழு அமைச்சர்கள் ஆளுங்கட்சியிலிருந்து விலக எதிர்பார்த்திருந்தனர்.
எனினும் குறித்த அமைச்சர்களைத் தொடர்பு கொண்ட ஆளுங்கட்சியின் அதிகாரமிக்க செயலாளர் ஒருவர் கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தியுள்ளார். மேலும் குறித்த செய்தியாளர் மாநாடு நடைபெறவிருந்த கொள்ளுப்பிட்டி ஹோட்டலுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வாசஸ்தலம் அமைந்துள்ள பகுதியில் இன்று மாலை தொடக்கம் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இவ்வாறான அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இன்று மாலை நடைபெறவிருந்த ஊடக மாநாடு நாளை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் முக்கிய சிறுபான்மை அமைச்சர் ஒருவர் ஆளுங்கட்சியை விட்டு விலகும் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மேலும் சில அமைச்சர்களும் ஒரு ஆளுனரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை! சந்திரிக்கா
மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இங்கு மேலும் கூறியதாவது,
9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மட்டுமல்ல பல காரணங்கள் உண்டு அவை ஒவ்வொன்றையும் கூற வெட்கமாக உள்ளது, அது இங்கு முக்கியமில்லை.
கொலை, துஷ்பிரயோகங்களே நாட்டில் இடம்பெறுகின்றன. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதோடு, எதிர்ப்பவர்களுக்கு இடமாற்றங்கள் உள்ளிட்ட சிக்கல் ஏற்படுகின்றன.
பலர் என்னை பொது வேட்பாளராக களமிறங்க கூறினர். 18வது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி முடியும் என்றனர்.
ஆனால் மீண்டும் அவ்வாறு போட்டியிட எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை, அரசியல் ரீதியாக தேவையான உதவிகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப உதவுவேன் எனக்கு எந்த பதவியும் தேலையில்லை, என தெரிவித்தார்.

Video bbc

அமெரிக்க தூதுவருக்கு ஐ. நாவில் புதிய பதவி!
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 09:51.17 AM GMT ]
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் துணை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார தொடர்புகள் சம்பந்தமான ஆணைக்குழு இந்த நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி பராக் ஒபாமா, துணை பிரதிநிதி பதவிக்கு சிசனை பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக தொடர்ந்தும் அவர் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYht7.html



No comments:

Post a Comment