Friday, November 14, 2014

ரசிகர்களுக்கு நன்றி: மெய்சிலிர்த்து போன மைக்கேல் சூமேக்கரின் மனைவி!


ஜேர்மனியின் பிரபல கார் பந்தய வீரரான மைக்கேல் சூமேக்கருக்காக பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்களுக்கு அவரது மனைவி நன்றி தெரிவித்துள்ளார்.
ஃபார்முலா ஒன் சாம்பியனான மைக்கேல் சூமேக்கர் கடந்தாண்டு நவம்பர் 29ம் திகதி பிரான்சின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.
இதனையடுத்து கடந்த 9 மாதங்களாக கோமாவில் இருக்கும் சூமேக்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் சூமேக்கர், இன்னும் 1 முதல் 3 வருடங்களில் குணமடைந்து விடுவார் என மருத்துவர் ஜீன் பிரான்காய்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மைக்கேல் சூமேக்கரின் மனைவி இதுபற்றி கூறுகையில், ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் வாழ்த்துகள் மற்றும் அனுதாபங்கள் வந்துகுவிகின்றன.
எனது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆதரவாய் இருக்கும் ரசிகர்களுக்கு, ஒரே வார்த்தையில் மட்டும் நன்றி சொல்லிவிட முடியாது.
மேலும் மைக்கேல் மீண்டும் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. உங்களுடைய தொடர்ச்சியான ஆதரவு எங்களது நம்பிக்கைக்கு இன்னும் வலுவூட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment