Thursday, November 20, 2014

வியப்பூட்டும் இயற்கை வெந்நீர் ஊற்று! (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் உள்ள ஓல்ட் ஃபெய்த்ஃபுல் நீர் சூடேற்றியில் இருந்து, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை சூடான நீர் நீருற்று போல மேல் நோக்கி உயரமாக வெளியே வரும் அதிசயம் நடக்கிறது.அமெரிக்காவில் மார்ச் 1, 1872-ல் தொடங்கப்பட்ட யெலோஸ்டோன் தேசியப் பூங்கா தான் அமெரிக்காவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா ஆகும்.
இந்த பூங்காவில் உள்ள ஓல்ட் ஃபெய்த்ஃபுல் நீர் சூடேற்றி என்னும் இயற்கை வெந்நீர் ஊற்று மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவை இந்த இடத்தில் இருந்து சூடான நீர், நீருற்று போல மேல் நோக்கி உயரமாக வெளியே வருகிறது.
இந்த அதிசயத்தினை காண ஆண்டுதோறும் சுற்றுலாவாசிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இது தவிர கிரிசிலி கரடி, ஓநாய், எருமை போன்ற விலங்குகள் இப்பூங்காவில் வாழ்கின்றன.
8,987 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இப்பூங்காவிலுள்ள பெரிய காடுகள் மற்றும் நிலங்களில் பல தாவர இனங்களும் வாழ்கின்றன.
மேலும், மீன்பிடிப்பு, கப்பல் ஓட்டம், முகாம் அமைத்தல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஈடுபடுகின்றனர்.

No comments:

Post a Comment