Wednesday, November 12, 2014

மெற்றோ பொலிடன் பொலிசார் கோட்டை விட்ட ஆள் இவர் தான்: நாட்டை விட்டு எஸ்கேப் !


கடந்த செப்டெம்பர் மாதம் 8 முஸ்லீம் நபர்களை, லண்டனில் உள்ள மெற்றோ பொலிடன் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். பிரிட்டன் உளவுப் பிரிவான MI6 வழங்கிய தகவலுக்கு அமையவே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள். சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்களை கைதுசெய்த பொலிசார் பின்னர் இவர்களில் ஒருவரான, சித்தார்த் டாகார் என்னும் 31 வயதான நபரை பிணையில் விடுவித்தார்கள். அவர் மீண்டும் டிசம்பர் மாதம் வந்து பொலிசாரிடம் சரணடையவேண்டும் என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.
அவ்வளவு தான், பொலிஸ் நிலையம் விட்டு வெளியே வந்த சித்தார்த் 24 மணி நேரத்தில் பிரிட்டனை விட்டு பறந்துவிட்டார். மெற்றோ பொலிடன் பொலிசாருக்கு, கம்பி நீட்டிவிட்டு இவர் சிரியாவுக்கு சென்றுவிட்டார் என்ற தகவல் தற்போது தான் பொலிசாருக்கு எட்டியுள்ளது என்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் பொலிசார் கைதுசெய்த நபர் உண்மையில் தீவிரவாதிகளோடு தொடர்பில் தான் இருந்துள்ளார். ஆனால் மிகவும் சாமர்த்தியமாக நடித்து ஒன்றும் தெரியாத அப்பாவிபோல இருந்துள்ளார். பின்னர் கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

No comments:

Post a Comment