Monday, November 10, 2014

படுகாயமடைந்த அல்பாக்தாதி: அதிர்ச்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபெக்கர் அல்பாக்தாதி படுகாயமடைந்ததால் தீவிரவாதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் ஈராக்கின் மேற்கு இன்பர்(Inbar) மாகாணத்தின் குயாயிம்(Kuyayim) பகுதியில், அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் அந்த அமைப்பின் தலைவர் அபூபெக்கர் அல்பாக்தாதி படுகாயமடைந்த தகவலை ஈராக் அரசு உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அல்பாக்தாதி படுகாயமடைந்துள்ளது தற்போது எங்களுக்கு தெரியவந்துள்ளது என்றும் அவருக்கு உடலில் எங்கெங்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது விரைவில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தலைவரின் நிலைமை கண்டு தீவிரவாதிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.எஸ்.ஐ.எஸ்-யுடன் கடும் தாக்குதலில் குர்திஷ்: 1000க்கும் மேற்பட்டோர் பலி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 05:01.43 மு.ப GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே நடக்கும் தாக்குதலில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கோபேனி(Kobani) நகரை கைப்பற்ற திட்டமிட்டது.
ஆனால் இவர்களை தடுத்து நிறுத்த அப்பகுதியில் வாழும் குர்திஷ் படையினர், கடந்த 50 நாட்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் இதுவரை 1,013 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இறந்தவர்களில் 609 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் 363 பேர் குர்திஷ் மக்கள் எனவும் மனித உரிமை அமைப்பின் இயக்குநர் ரமி அப்துல் ரஹ்மான்(Rami Abdul Rehman) கூறியுள்ளார்.

No comments:

Post a Comment