Sunday, November 9, 2014

சுவிசை அதிர வைத்த தமிழ் மனைவியை தீ மூட்டிய கணவன் எரிந்து சாம்பல்

சுவிற்சர்லாந்தின் லுகார்னோ மாகாணத்திலுள்ள ஸ்ராபியோ எனும் இடத்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழரான கணவன் மனைவி இருவரும் காருடன் எரியூட்ப்பட்டு சாவடைந்துள்ளனர். கணவரான அமலதாஸ் (வயது 68) ஏற்கனவே திருமணமானவர் அவருக்கு முதல் மனைவியுடன் 5 பிள்ளைகளும் இருந்த நிலையில் முதல் மனைவி இறந்தார்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு சாந்தி(வயது 49) என்பரை இரண்டாவதாக திருமணம் முடித்தார். சாந்தி 2009ஆம் ஆண்டே சுவிஸ் வந்திருந்தார். எனினும் இவர்களுக்கிடையேயான உறவு திருப்திகரமற்றிருந்தாகவும் அடிக்கடி இவர்களுக்கிடையே சண்டை ஏற்படுவதாகவும் அமலதாஸ் சாந்தியை மிகவும் துன்புறுத்தியதாகவும் தெரியவருகிறது. இதனை சாந்தியே தனது தொழிற்சாலை முகாமையாளரான மரிசா புறுநோறோவிடம் தெரிவித்ததாக புறுநோறோ சொல்கிறார்.
இந்நிலையில் சாந்தி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றில் இருக்கும் வேளை சாந்தி பெண்களைத் தங்க வைக்கும் விடுதியொன்றில் அரசால் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
மேலும் சாந்தி லுகார்னோவிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தமிழ்ச் சிறுவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
சம்பவதினம் சாந்தி வேலைக்குச் செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த போது. அமலதாஸ் அங்கு வந்து சாந்தியை கத்தியால் குத்தியுள்ளார்.சாந்தி அவ்விடத்திலேயே இறந்து விட அவரது உடலை தனது காரிலேற்றிக் கொண்டு ஸ்ராபியோ என்னும் இடத்தில் வைத்து காருடன் தன்னையும் சாந்தியின் உடலையும் சேர்த்து எரியூட்டி தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவத்தை விசாரணை செய்து வரும் சுவிஸ் பொலிஸார் தெரிவிக்கையில் தடயவியல் சோதனையின்படி இருவரின் எலும்புகளும் பற்களும் மட்டுமே எஞ்சியுள்ளதகவும் சாந்தி இறந்தது அமலதாசுக்கு முன்னர் எனவும் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவத்தால் சுவிஸிலுள்ள தமிழர் மத்தியில் சோகமும் அதிருப்தியும் காணப்படுவதாகவும் இவ்வாறான சம்பவங்களால் புலம் பெயர் தேசங்களிலுள்ள இளையோருக்கு பெரியவர்கள் எவ்வாறு வழிகாட்டமுடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
Dramma di Stabio, rinvenuta l’arma (நன்றி ticinonews.ch)
stabio00002
STABIO-NEU
 http://www.jvpnews.com/srilanka/86246.html

No comments:

Post a Comment